ஒரு வருடமானாலும் கவரிங் நகை கருத்து போகாமல் இருக்க இதை பண்ணுங்க

Advertisement

கவரிங் நகை பாலிஷ் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கவரிங் நகை கருக்காமல் இருக்க வாங்கியவுடன் இதைசெய்தால் கருக்காமல் இருக்கும். பெண்கள் பலருக்கும் கவரிங் நகை மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த நகையை ரொம்ப நாள் பயன்படுத்த முடியாது. பிடித்த நகையை கூட ரொம்ப நாள் பயன்படுத்த முடியாது.  குறைந்தது 6 மாதங்கள் வரையில் தான் பயன்படுத்த முடியும். வாங்க இந்த  நகையை  நீண்ட நாள் கருக்காமல் இருக்க என்ன செய்வது என்று  தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கவரிங் நகை பாலிஷ் பண்ணுவது எப்படி தெரியுமா?

கவரிங் நகை கருக்காமல் இருக்க டிப்ஸ்:

முதலில் நீங்கள் வாங்கிய கவரிங் நகையை எடுத்து கொள்ளவும். பிறகு வெள்ளை கலர் நெயில் பாலிஸ் எடுத்து கொள்ளுங்கள். வாட்டர் கலர் நெயில் பாலிஸில் வெள்ளை கலர் வாங்கி கொள்ளவும்.

பிறகு கவரிங் நகையை ஒரு துணியில் மேல் வைத்து கொள்ளுங்கள். பின் இந்த நகையின் மீது வாட்டர் கலர் நெயில் பாலிஷை தடவுங்கள். ஒரு இடம் விடாமல் தடவுங்கள்.

பின் ஒரு பக்கம் போட்டு காய்ந்தவுடன் பின் பக்கமும் போடுங்கள். பின் நன்றாக காய விடுங்கள். காய்வதற்கு முன் நகையின் மீது கை வைத்து விட்டால் அந்த இடம் மட்டும் கருக்க ஆரம்பிக்கும்.

இந்த நெயில் பாலிஷ் போட்ட நகையை அடிக்கடி பயன்படுத்தினாலும் சரி, முழு நேரம் போட்டே இருந்தாலும் கருக்காது.

கவரிங் நகை பயன்படுத்திய பிறகு  உடம்பில் உள்ள வியர்வை நகையில் இருக்கும். அதனால் அந்த வியர்வையோடு வைக்க கூடாது. சிறிது நேரம் பேனில் காயவைத்து வியர்வை நீங்கியவனுடன் வைக்க வேண்டும்.

அடுத்து நகையை சும்மா டப்பாவில் வைக்க கூடாது. டப்பாவில் வைக்கும் போது அதில் உள்பக்கத்தில் ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மேல் நகையை வைக்க வைத்து மூடி வைக்க வேண்டும். ஒரு போதும் கவரிங் நகையை திறந்து வைக்காதீர்கள். திறந்து வைத்தால் நகை சீக்கிரம் கருத்து விடும்.

மேல் கூறப்பட்டுள்ள உள்ள டிப்ஸை Follow பண்ணி கவரிங் நகையை பயன்படுத்துங்கள். நகை சீக்கிரம் கருத்து போகாது இன்னொன்று தங்க நகை போல் இருக்கும். இனி மறக்காமல் கவரிங் நகை வாங்கியவுடன் இந்த டிப்ஸை பண்ணிடுங்கள் நண்பர்களே..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement