பாத வெடிப்பு நீங்க 10 எளிய டிப்ஸ் | Cracked Heels Home Remedy in Tamil
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று பாத வெடிப்பு. இந்த பிரச்சனை பொதுவாக தினமும் அதிக நேரம் நடப்பதன் மூலமாகவும் அதிக நேரம் நீரில் நிற்பதனாலும் ஏற்படும் என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு பிரச்சனை வந்துவிட்டால் பிறகு நடப்பதற்கும், நிற்பதற்கும் ரொம்ப சிரமமா இருக்கும். சிலர் வலியை தாங்கிக்கொள்வார்கள், ஆனால் பலரால் இந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த அளவிற்குத்தான் இதனுடைய வலியும் இருக்கும். கால்களில் பாத வெடிப்பு வந்துவிட்டது என்றால் கால்களை வெளிய காட்டுவதற்கு பலர் தயங்குவார்கள். பாத வெடிப்பு பிரச்சனை உள்ள அனைவருக்கும் உதவும் வகையில் இன்று 10 எளிய டிப்ஸினை பற்றி பார்க்கலாம் வாங்க.
Cracked Heels Treatment at Home in Tamil
டிப்ஸ்: 1
பப்பாளி பழத்தை பழச்சாறு கலந்து கால் வெடிப்புகளில் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும். 1/2 மணி நேரம் கழித்து பாதங்களை கழுவவும். இந்த முறையை வாரத்தில் 3 முறை செய்து வந்தால் பாத வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.
டிப்ஸ்: 2
காலை எழுந்ததும் வெது வெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வைத்திருக்கவும். பின் கிளிசரின், பன்னீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பவுலில் சம அளவு எடுத்துக்கொள்ளவும். பின் அதனை நன்றாக மிக்ஸ் செய்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்..!
டிப்ஸ்: 3
பப்பாளி பழத்தை மட்டும் நன்கு அரைத்து பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் இரவு உறங்குவதற்கு முன் அப்ளை செய்து மறுநாள் கால்களை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்பு சரியாகிவிடும்.
டிப்ஸ்: 4
மருதாணி இலையை நன்கு அரைத்து இரவு உறங்குவதற்கு முன் பாத வெடிப்பில் தினமும் அப்ளை செய்து வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
டிப்ஸ்: 5
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பிறகு அந்த நீரில் உங்கள் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு சொரசொரப்பான பிரஷை கொண்டு பாதத்தை தேய்க்கவும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் பாத வெடிப்பு சில நாட்களிலேயே நீங்கிவிடும்.
டிப்ஸ்: 6
வேப்பிலை மற்றும் மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவும். பின் இந்த அதனுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பின் இந்த கலவையை உங்கள் கால்களில் வெடிப்பு உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 1/2 மணி நேரம் கழித்து கால்களை கழிவிடவும். இவ்வரும் வாரத்தில் 2 முறை செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.
டிப்ஸ்: 7
தரமற்ற செருப்புகளை அணிந்துகொள்வதினாலும் சிலருக்கு கால்களில் பாத வெடிப்புகள் ஏற்படும் ஆக. செப்பல் வாங்கும் போது தரமான செப்பல்களை வாங்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 நாட்களில் பாதவெடிப்பு முற்றிலும் மறைய இந்த 3 பொருள் மட்டும் போதும்..!
டிப்ஸ்: 8
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இப்பொழுது பேஸ்ட் போல் இருக்கும் இந்த பேஸ்டை உங்கள் பாத வெடிப்புகளில் அப்ளை செய்யவும். பிறகு சிறிது நேரம் கழித்து கால்களை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் பாத வெடிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
டிப்ஸ்: 9
இரவு நேரத்தில் உறவுக்குவதற்கு முன் கால்களில் சிறிது தேங்காய் எண்ணெயை ஆஃபிலு செய்துவிட்டு உறங்கவும். தினமும் குளித்த பிறகு கால்களில் ஈரப்பதம் இல்லாமல் நன்றாக துடைத்துவிடும். அதன் பிறகு விளக்கெண்ணையை சிறிதளவு கால்களில் தேய்த்து வந்தால் பாத வெடிப்புகள் வருவதை தடுக்கலாம்.
டிப்ஸ்: 10
தினமும் கடுகு எண்ணெயை பாத வெடிப்பும் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் சொரசொரப்பு தன்மை நீங்கி கால்கள் மென்மையாக இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |