கோதுமை தட்டை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது மாலை நேர ஸ்னாக்ஸ். இந்த ஸ்னாக்ஸ் வகைகளை தயாரிக்கும் போது சுவையானது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமானத்தையும் தயாரிக்க வேண்டியது குடும்ப தலைவிகள் கடமை. சிலர் ஸ்னாக்ஸ்வகைகளை காலை, மதியம், இரவு என அனைத்து வேளையும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். முதன்மை உணவுகள் இருந்தாலும் அதனுடனும் முறுக்கு, தட்டை போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை விரும்புவார்கள்.
தீபாவளிக்கு நாமும் ஒவ்வொரு வருடமும் ஒரு வகையான பலகாரங்களை தயாரிப்போம். அந்த வகையில் இந்த வருடம் கோதுமை மாவில் மொறு மொறுவான ஒரு காரமான ஸ்னாக்ஸ் செய்யலாம் வாருங்கள். கோதுமை தட்டை வீட்டிலே மிகவும் எளிதாக செய்வது எப்படி? அவ்வாறு செய்வதற்கு என்ன என்ன தேவை படும். அதிக கடினம் இல்லாமல் செய்வது எப்படி என்பதனை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மொறு மொறு கோதுமை தட்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கோதுமை – 1 1/2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
ஓமம் – சிறிதளவு
வெந்தய கீரை – 1 கப்
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள கோதுமை மாவு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், ஓமம், வெந்தய கீரை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
பின்னர் அந்த மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவை நன்றாக பிசைந்து 20 நிமிடங்கள் வரை முடி வைக்கவும்.
20 நிமிடங்கள் பிறகு மாவை சிறு சிறு பந்துகளாக பிரித்து அதனை சப்பாத்திக்கு உருவாக்குவது போல் மென்மையாக தேய்த்து கொள்ளவும்.
பின்னர் தேய்த்து எடுத்ததில் முள் கரண்டியை கொண்டு குத்தவும்.
பின்னர் அதனை, எண்ணெயை சூடாக்கி அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுக்கவும்.
இப்போது சுமையான மொறு மொறு கோதுமை தட்டை ரெடி.
இந்த கோதுமை தட்டை மாலை நேர ஸ்னாக்ஸ்க்கு ஏற்றதாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இதனை செய்து சுவைத்துப்பாருங்கள்.
15 நிமிடத்தில் தீபாவளி ஸ்பெஷல் தித்திக்கும் ஜிலேபி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |