உங்களுக்கு சுருட்டை முடி உள்ளதா? அப்படினா உங்களுக்கு தான் இந்த பதிவு..!

Advertisement

Curly Hair Tips in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கிறதா என்று சொல்லமுடியாது காரணம் அனைவருக்கும் சுருட்டை முடி இருப்பதில்லை. ஆகையால் இந்த பதிவை படிப்பவர்கள் சுருட்டை முடி இருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பொதுவாக ஆண்களை விட பெண்கள் முடியை பராமரிப்பதில் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள் அல்லவா சாதரணமாக முடி இருந்தால் அதனை சீவுவதற்குள் பெரிய போர்க்களம் நடக்கும் அல்லவா அதே சுருட்டை முடி இருந்தால் அவர்களுக்கு தலை குளிப்பது முதல் அதனை காயவைக்கும் வரை பெரிய பிரச்சனையாக தான் இருக்கும். இனி கவலை வேண்டாம் இந்த டிப்ஸை follow  பண்ணுங்க ஈசியாக இருக்கும்.

Curly Hair Tips and Tricks in Tamil:

டிப்ஸ்: 1

 curly hair tips in tamil

சுருட்டை முடி உள்ளவர்கள் தினமும் தலைக்கு தேய்த்து குளிக்க கூடாது. வாரத்திற்கு 2 முறை அல்லது 3 முறை மட்டுமே தலை குளிக்கவேண்டும். அப்போது தான் முடி சிக்கு அடையாமல்  இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!

டிப்ஸ்: 2

hair dryer for women disadvantage in tamil

தலை குளித்த பின் சாதாரண முடி உள்ளவர்கள் தலைமுடி விரைவில் காய்ந்துவிடும் ஆனால் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு விரைவில் காய்வதில்லை அவர்கள் விரைவில் காயவைப்பதற்கு Hair dryer ரை பயன்படுத்துவார்கள். அதனை பயன்படுத்துவதால் முடியானது விரைவில் வலுவிழந்து முடி வறட்சி நிலையை அடையும்.

டிப்ஸ்: 3

 curly hair tips in tamil

சுருட்டை முடி உள்ளவர்கள் அனைவருமே செய்யும் தவறு என்னவென்றால் அனைத்து விதமான ஷாம்புக்களை பயன்படுத்துவது தான். அதனால் முடி விரைவில் சுருண்டு விடும், வறண்டு விடும், நுனி பிளவு ஏற்படும் அதனை தடுக்க உங்களின் முடிக்கு ஏற்ற ஷாம்புகளை பயன்படுத்துவது தான் நல்லது.

டிப்ஸ்: 5

 curly hair tips in tamil

அனைவரும் சிறிய பற்கள் கொண்ட சீப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் ஆனால் சுருட்டை முடி உள்ளவர்கள் அதனை பயன்டுத்துவதால் மேலும் முடியில் சிக்கு ஆகிவிடும், எனவே சுருட்டை முடி உள்ளவர்கள் இனி பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

டிப்ஸ்: 6

தலைக்கு குளிப்பது

சுருட்டை முடி உள்ளவர்கள் தலைக்கு குளிக்கும் போது அழுத்தி தேய்த்து குளித்தால் முடி உடையும், முடி கொட்டுதல், சிக்குபிடிக்கும் ஆகையால் தலை குளிக்கும் போது அழுத்தி தேய்ப்பதை தவிர்க்கவும்.

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement