தினமும் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா?

daily use powder in tamil

தினமும் பயன்படுத்தும் பொருள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் மிகவும் உதவியாக இருக்கப்போகிறது அது  என்ன பொருள் அது எத்தனை வேலைகளுக்கு உதவியாக இருக்கப்போகிறது என்று சில டிப்ஸ்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக வீட்டில் ஒரு பொருளை பயன்படுத்தி வந்தால் அது ஒரு விஷயத்திற்கு அல்லது இரண்டு விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஒரு பொருள் நமக்கு கஷ்டத்தை ஏற்படுத்த கூடிய பொருட்கள் அல்லது விரைவில் வீணாக கூடிய பொருட்களை நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தவும் உதவியாக இருக்கும். வாங்க அது என்னவென்று தெரிந்துகொள்வோம்.

தினமும் பயன்படுத்தும் பவுடர்:

நாம் பவுடரை வைத்து முகத்தை மட்டுமே அழகுபடுத்த முடியும் என்று நினைத்திருப்பீர்கள் ஆனால் இதற்கு பிறகு அப்படி யாரும் யோசிக்க மாட்டார்கள்.

கவரிங் நகைகளை பாலிஷ் செய்வது எப்படி:

 daily use powder in tamil

நாம் வெளியூர் சென்று வந்தவுடன் சில தவறுகளை செய்வோம். வந்த களைப்பில் செருப்பை கழட்டிவிட்டு உடனே ரூம்க்கு சென்று நகைகளை கழட்டி தூக்கி போட்டு விட்டு படுத்து ஒய்வு எடுக்க சென்று விடுவோம். அப்போது நீங்கள் கழட்டி வைக்கும் நகைகளில் உங்களுடைய வியர்வை தண்ணீர் பட்டு அந்த நகைகள் அனைத்தும் மிக விரைவில் கருத்து போகும். இனி அதனை பற்றிய கவலை வேண்டாம். கழட்டி வைக்கும் டப்பாவில் சிறிதளவு தினமும் பயன்படுத்தும் பவுடரை கொட்டி வைத்துவிட்டால் உங்கள் நகைகளில் எந்த ஒரு வியர்வையும் தங்காது. நகையும் புதுசாக இருக்கும்.

கண்ணாடி சுத்தம் செய்வது எப்படி:

தினமும் நம்மை அழகுபடுத்த அழகை நமக்கு காண்பிப்பது போன்ற அனைத்திற்கும் தேவைப்படும் பொருள் கண்ணாடி. கண்ணாடியை பயன்படுத்தும் போது நாம் எண்ணெய் பயன்படுத்துவோம். அப்போது அது அந்த கண்ணாடியில் பட்டு முகத்தை பார்ப்பதற்கே தெரியாமல் இருக்கும். அதனை நாம் தண்ணீர் தொட்டு துடைக்க கூடாது அப்படி துடைத்தாலும் அது சரியாக தெரியாது.  ஆகவே ஒரு காட்டன் துணியில் பவுடரை கொட்டி கண்ணாடி மீது தேய்த்து விடுங்கள். பின்பு துணியால் துடைத்து  பாருங்கள் புதியது போல் காட்சி அளிக்கும்.

துணி மடிப்பது எப்படி:

 daily use powder in tamil

துணியை பீரோவில் வைத்து அதற்கு தனியாக ஒரு அந்துருண்டை வாங்கி துணியின் இடையில் வைப்பீர்கள். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. இனி துணிகளை மடித்து வைத்தால் அதில் ஒரு பேப்பரில் பவுடரை மடித்து வையுங்கள் அதன் பின் நீங்கள் பயன்படுத்தும் போது நறுமணம் வீசும்.

தீப்பெட்டி நமத்து போகாமல் இருக்கா:

தீப்பெட்டி நமத்து போகாமல் இருக்கா

தீப்பெட்டி பயன்படுத்துவதை அதிகம் யாரும் விரும்பவதில்லை ஆனால் அதிக நபர்கள். எதோ ஒரு தேவைக்காக ஒன்று இரண்டு பெட்டிகள் மொத்தமாக வாங்கி வைத்திருப்பீர்கள். மழைக்காலம் அல்லது பனிக்காலம் வந்தால் விரைவில் நமத்து விடும். அப்படி போகாமல் இருக்க பவுடரை அதில் சிறிது கொட்டி வைத்தால் நன்றாக இருக்கும்.

ஹெட் செட்:

 தினமும் பயன்படுத்தும் பொருள்

நாம் வெளியில் செல்லும் போது எதை எடுத்து செல்ல வேண்டுமாலும் மறப்போம் ஆனால் ஹெட்செட் எடுத்து செல்ல மறப்பதில்லை. அப்படி அதிகம் பயன்படுத்தும் போது காதில் அதிகம் வைத்துக்கொள்வோம் அப்படி வைப்பதால் அதில் காதில் உள்ள அழுக்குள் வரும். அதனை துடைக்காமல் அப்படியே மறுமுறையும். பயன்படுத்துவோம். இனி அப்படி பயன்படுத்துவதற்கு முன்னால் அதில் சிறிது பவுடர் தடவி வையுங்கள்.

வெள்ளி நகைகளை புதுசாக மாற்ற சிறந்த டிப்ஸ் இதோ..!             

velli-kolusu-cleaning-in-tamil

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com