Dark Knees Treatment at Home in Tamil
அனைவருமே அழகை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துகின்றோம். ஆனால் கை மற்றும் கால் முட்டிகளில் இருக்கும் கருமையை மறந்து விடுகிறோம். மறந்து விடுகிறார்கள் என்பதை விட அதற்கு யாரும் கவனம் செலுத்துவது இல்லை என்றே சொல்லலாம். கருப்பு நிறம் அதிகமான பிறகு தான் அதை பார்த்து கவலைப்படுவார்கள். இதனை நீக்குவதற்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருப்பார்கள். இந்த பதிவில் முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க சில டிப்ஸை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கை முட்டி மற்றும் கால் முட்டி கருமையை போக்க டிப்ஸ்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது.
இரு எலும்பிச்சையை பாதியாக நறுக்கி கொள்ளவும். பாதி எலும்பிச்சையை முட்டியின் மீது வைத்து தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் தேன்:
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இதனால் கிருமிகளை அகற்றி சருமத்தை ஒளிர செய்கிறது. தேன் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
ஒரு பவுலில் பால் சிறிதளவு, தேன் சிறிதளவு, மஞ்சள் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை கருமையாக இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்க
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் பிளிச்சிங் செய்யும் தன்மை உள்ளது. இது கரும்புள்ளிகளை நீக்க உதுவுகிறது.
உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். கட் செய்த உருளைக்கிழங்கின் உள்பகுதியை கருமையாக இருக்கும் இடத்தில் வைத்து தேய்க்கவும்.
இல்லையென்றால் உருளைக்கிழங்கை கட் செய்து அரைத்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். அதனுடன் எலும்பிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கருமையாக உள்ள இடத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளவும்.
கற்றாழை:
கற்றாழை ஹைப்பர் பிக்மென்டேஷனை எதிர்த்து போராட உதவுகிறது.
கற்றாழையை தோல் சீவி அதில் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கருமையாக உள்ள இடத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை:
ஆலிவ் எண்ணெய் ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. சர்க்கரை இறந்த செல்களை நீக்குகிறது.
ஒரு பவுலில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கருமையாக உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து சோப்பை பயன்படுத்தி தேய்த்து கழுவி கொள்ளவும்.
கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமை நீங்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |