குக்கரில் சமைப்பதற்கு முன்பு இதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

disadvantages of cooker in tamil

பிரஷர் குக்கர்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் காலத்தில் பருப்பை வேக வைப்பது, சாதம் வடிப்பது, பால் காய்ச்சுவது போன்ற எல்லா வகையான சமையல்களும் சமைப்பது அடுப்பில் தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் சமையல் கேசில் தான் சமைப்பார்கள். அதில் என்ன பாத்திரத்தை வைத்து சமைக்கிறார்களா.! இல்லையோ குக்கரில் தான் சமைக்கிறார்கள். அந்த குக்கரில் பால் காய்ச்சுவதிலுருந்து அனைத்து வகையான சமையல்களும் குக்கரில் தான் சமைக்கிறார்கள். அப்படி அந்த குக்கரில் சமைப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் எந்த உணவுகளை அதிகமாக சமைக்க கூடாது என்று  இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ குக்கர் பராமரிப்பு குறிப்புகள்..!

குக்கரில் எந்த உணவுகளை சமைக்க கூடாது:

சாதம் வைப்பது:

குக்கரில் சமைக்கப்படும் உணவுகளில் அதிகமாக சமைக்க கூடியது சாதம் வைப்பது தான். ஈசியாக வேலை முடிந்துவிடும் என்பதற்காக சாதத்தை குக்கரில் வைப்பார்கள். வெள்ளை சாதம் மட்டுமில்லை அரிசியால் எந்த உணவுகளும் குக்கரில் சேமிக்க கூடாது.  ஏனென்றால் குக்கரில் அரிசியை சமைக்கும் போது அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இதனால் நம் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். மேலும் உடல் எடையை அதிகப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். 

கிழங்கு வகைகள்:

நம்மில் பலரும் கிழங்குகள் விரைவாக வேகுவதற்கு குக்கரில் வேக வைப்போம். கிழங்கில் மாவு சத்துக்கள் அதிகமாக இருக்கும். இதனால் மாவு சத்து நிறைந்த உணவு பொருட்களை சமைக்கும் பொழுது நமது ஆரோக்கியத்தில் புற்றுநோய் மற்றும் நரம்பு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

குக்கரை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்:

அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் போன்ற வகைகளில்  தான் குக்கர் செய்யப்படுகின்றன. காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் போன்ற வகைகளில் செய்யப்பட்ட குக்கரில் சமைக்கும் போது மெட்டல்களின் அளவு குறைவாக காணப்படும். ஆனால் அலுமினிய குக்கரில் சமைக்கும் பொழுது 1 முதல் 2 மில்லி கிராம் அளவிற்கு மெட்டல் உணவு வழியாக நம் உடலுக்குள் செல்கிறது. 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி ஒரு நாளைக்கு 50 மில்லி கிராம் நம் உணவில் சேர்ந்தால் எந்த வித பாதிப்பும் இல்லை. ஆனால் இதை விட அதிகமாகும் போது உடலில் பிரச்சனை ஏற்படும்.

அதே போல் பிரஷர் குக்கர் எந்த வகை பாத்திரங்களில் செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய ஆயுட் காலம் 2 ஆண்டு காலம் மட்டும் தான்  அதற்கு மேல் பயன்படுத்த கூடாது.

இதையும் படியுங்கள் ⇒ பருப்பு வேக வைத்தால் தண்ணீர் வெளியே வந்து குக்கரை நாசம் செய்கிறதா.! இது போல் செய்யுங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil