ஹெட்செட் பயனர்கள் கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Headset Disadvantages in Tamil

ஸ்மோர்ட் போன் எவ்வளவு உள்ளதோ அந்தளவிற்கு ஹெட் செட் வாங்குவது குறைவதில்லை. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மேலும் பாட்டு கேட்கும் பொருட்கள் நிறைய வகைகளாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தவறு தான். இனி யாரெல்லாம் ஹெட் செட் பயன்படுத்தினால் இந்த விஷயங்களை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Headset Disadvantages in Tamil:

நீங்கள் சொல்லலாம்  நாம் பயன்படுத்துவது விலை உயர்வு ஆகவே அதை நாம் பயன்படுத்தினால் அது ஒருபோதும் எனக்கு பாதிப்பை அளிக்காது என்று. எந்த பொருளாக இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கெடுதல் தான். 

சிலர் அதனை எங்கு சென்றாலும் போட்டுக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருந்தாலும் அதனை வைத்து தான் போன் பேசுவது கேம் விளையாடுவது பாட்டு கேட்பது என்று எங்கு சென்றாலும் அதனையும் சேர்த்து எடுத்து செல்வார்கள்.  இப்படி செய்வது மிகவும் தவறு. அதன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி இங்கு பார்ப்போம்..

காது தொற்று:

இயர்போன்கள் அல்லது ஹெட்ஃபோன்கள் பயன்படுத்துவதால் அது காதுகளின் கால்வாயில்கள் வழியாக நேரடியாக காதுகளில் காற்று பாதைக்கு ஒரு தடையாக உள்ளது. மேலும் காதுகளில் வேர்வைகள் உருவாகும். அதனால் காதுகளில் பாக்டிரியாக்கள் ஏற்பட்டு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தொற்றுகள் நிறைய வகையான நோய்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. 

காது வலி காரணங்கள்:

நீண்ட நேரங்கள் இயர்போன்கள் பயன்படுத்துவதால் நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது காத்து வலி தான். ஏனென்றால் காதுகளில் உள்பக்கம்  இயர்போன்கள் அதிகளவு சத்தத்தை அனுப்புவதால் நிச்சயம் காதுகளுக்கு வலியை ஏற்படுத்தும்.

மயக்கம் வர காரணம்:

ஹெட்செட் அதிகமாகப் பயன்படுத்தினால், வெர்டிகோ எனப்படும் உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். வெர்டிகோ என்பது தலை சுற்றல் பிரச்சனைகளில் ஒன்று. மேலும் ஒலிகளால் காது கால்வாயில் அழுத்தம் அதிகரிப்பது தலைச்சுற்றலுக்கு வழி செய்கிறது.

இதனால் காதுகள் விரைவாக கேட்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு காதுகளில் ஹெட்செட் பயன்படுத்துவது மிகவும் தவறு. ஆகவே இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு சொல்லவருவது என்னவென்றால் அதிக நேரம் ஹெட் செட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் –>  இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா..?

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> tips in tamil
Advertisement