Do you know how to handle flooded cars?
தற்பொழுது சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இந்த வெள்ளம் காரணமாக நிறைய வாகனங்கள் நீரில் மூழ்கி பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
அப்படி நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்ட வாகனத்தை நாம் எப்படி கையாள வேண்டும்? அதாவது அந்த வாகனத்திற்கு என்னமாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும்? என்ன மாதிரியான விஷயங்களை செய்ய கூடாது என்று இப்பொழுது நாம் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
வாகனகள் தண்ணீரில் மூழ்கினால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் உங்களுக்கு காரின் பேட்டரி வயரின் இணைப்பை துண்டிக்க தெரியும் என்றால் அதனை முதலில் துண்டிக்க வேண்டும். ஏன் இந்த car battery disconnect செய்ய வேண்டும் என்றால். இப்பொழுது உள்ள எலக்ட்ரானிக் வாகனங்கள் எல்லாம் ஷாக் அடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஆக முதலில் உங்கள் காரில் உள்ள பேட்டரி வயரிங் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
பொதுவாக கார் வைத்திருப்பவருக்கு அடிப்படை விஷயமான ஆயில் லெவல் பரிசோனை செய்யும் இடம் எங்கு இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்துருக்கும். ஆக அதனை செக் செய்யும் போது இன்ஜினில் தண்ணீர் இருக்கிறது என்றால் அவர்கள் வேறு எதுவும் செய்ய கூடாது.
ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து உடனடியாக ஏர் ஃபில்டர், ஆயில் ஃபில்டர் இவையெல்லாம் மாற்றி விட்டு. அவற்றில் தண்ணீர் இருந்தால் அதனை முழுமையாக எடுத்துவிட வேண்டும்.
தண்ணீரை எடுத்த பிறகு அடுத்த ஸ்டேப் என்ன செய்ய வேண்டும் என்றால் பெட்ரோல் வண்டியாக இருந்தால் spark plug, டீசல் வண்டியாக இருந்தால் Injector ஆகியவற்றை நீக்க வேண்டும். ஆக கார் தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கார் மெக்கானிக்குகளின் உதவியை நாடவும்.
இன்ஜினில் நீர் இருந்து அந்த காரை நீங்கள் கண்டிப்பாக இயக்கக்கூடாது. ஒரு வேலை நீங்கள் இயக்கினால் அந்த காருக்கு பெரிய பாதிப்பு உண்டாகும்.
ஆக இன்ஜினில் உள்ள தண்ணீரை நீக்கிவிட்டு ஏர் ஃபில்டர், ஆயில் ஃபில்டர் இரண்டயும் மாற்றினால் உங்களுடைய வாகனம் இயங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதன் பிறகு எந்த பாதிப்புகளும் வராது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |