இரவில் தண்ணீர் குடித்தால் தூக்கம் வராதா? இது போல் நிறைய விஷயம் உங்களை தூங்கவிடாமல் செய்கிறது

don't make this mistake before bed in tamil

Don’t Make This Mistake Before Bed in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தூங்கமால் இருக்க என்ன காரணம் தெரியுமா? அதனை பற்றி தான் இந்த பதிவு. பொதுவாக சிலர் தூக்காமல் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது போன் தான். அதனை பார்த்துகொண்டு தூக்காமல் இருப்பார்கள். சிலர் தூங்க செல்வார்கள் நல்லாவே தூங்குவார்கள் ஆனால் திடீரென்று முழித்து விடுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் செய்யும் விஷயம் தான்.

நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் அவர்களின் தூக்கத்திற்கு பெரிய தடையாகவே இருக்கும். சின்ன விஷயம் தான் ஆனாலும் அது தூங்க முடியாமல் போகும். வாங்க அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்..!

தூக்கம் வராமல் இருக்க காரணம்:

முதலில் நாம் நல்லது என்று நினைத்து செய்யும் முக்கிய தவறு அதிகளவு இரண்டு நேரங்களில் தண்ணீர் குடிப்பது. நீர் சத்து அதிகம் உடலுக்கு தேவை தான் ஆனால் இரவு நேரங்களில் அதிகம் தண்ணீர் குடித்தால் அதுவே தூங்க விடாமல் முழிக்க செய்யும். காரணம் சில நேரங்களில் சிறு நீர் கழிக்க தொடங்குவோம். இது தான்  செய்யும் முதல் தவறு.

இரண்டாவது காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்றால் எண்ணத்தில் அலாரம் வைப்பார்கள் அதிலிருந்து வரும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். அதேபோல் அலாரம் வைத்தால் அதுவே நம்மை தூங்கவிடாமல் செய்யும். அதனால் குறைந்த வெளிச்சத்தில் வைத்து தூங்குகள்.

மூன்றாவது என்னவென்றால் அதிகம் சாப்பிடுவது. சிலர் இந்த தவறி அதிகம் செய்கிறார்கள். காலையில் குறைந்த சாப்பாடு, மதியம் நல்ல சாப்பாடு, அதுபோல் இரவு அதிகளவு சாப்பாடு சாப்பிட்டு தூங்குவார்கள். அது இரவில் தூங்கவிடாமல் நிறைய வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.

நான்காவது இதை பசங்கள் தான் அதிகம் செய்கிறார்கள் சிலர் இரவு சும்மா இருக்கிறோம் என்று நினைத்து உடல் பயிற்சி செய்வார்கள். அது மிகவும் மிகவும் தூக்கத்தை கெடுக்கும். உடல் பயிற்சி செய்தால் உடலில் வலியை ஏற்படுத்தும். அதுவே தூக்கமுடியாமல் செய்யும்.

ஐந்தாவது தவறு இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்து வருகிறார்கள். அது வேறு ஒன்றும் இல்லை LED Tv, போன் வெளிச்சம் போன்றவற்றை பார்க்க கூடாது. நீங்கள் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் blue  வெளிச்சத்தையும் பார்க்க கூடாது அதாவது போன் மூலம் tv மூலம் வரும் வெளிச்சத்தை பார்க்க கூடாது.

அடுத்து ஆறாவதாக உள்ளது தூக்கம் வரவில்லை என்றால் தூக்கமாத்திரை இந்த மாத்திரை போடவே கூடாது. ஏனென்றால் அது ஒரு போதை என்றும் சொல்வார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அடிமை ஆகுவோம். அதேபோல் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் அதன் பின்பும் மாத்திரை போட்டால் மட்டும் தூங்குவோம்.

சிலருக்கு தூக்கம் வரவேண்டும் என்பதற்காக புத்தகம் படிப்பார்கள் ஆனால் அது நீங்கள் படிக்கும் புத்தகத்தை பொறுத்தது. படிக்கும் புத்தகம் ஆர்வமாக இருந்தால் படித்துக்கொண்டு இருப்போம். அதனாலும் தூக்கம் வீணாப்போகும்.

முதலில் சரியாக தூங்க வேண்டும் அதாவது நீங்கள் இரவு 9 மணிக்கு தூக்கினால் அதுவே உங்களுக்கு பழக்கமாக இருக்கும் அதுவே சரியாக தூக்கவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் சரியாக வராது.

சிலர் அதிகமாக யோசனை செய்து கொண்டு வருவார்கள். அதிகமாக யோசிப்பதாலும் தூக்கத்தை இழப்பீர்கள்.

இரவு நேரத்தில் டீ, காபி குடிப்பதை நிறுத்தி விடுங்கள் இரவு நேரத்தில் குடிப்பதால் தூக்கத்தை நிறுத்தி விடும்.

மேல் கொடுக்கப்பட்ட பழக்கத்தை செய்யாதீர்கள். இதுவே நீங்கள் செய்யும் தவறுகள் ஆகும்.

 

இதையும் ட்ரை பண்ணுக 👉👉 இரவு தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips