தோசை கல்லில் ஓரத்தில் இருக்கும் துரு மற்றும் எண்ணையை நீக்குவதற்கு டிப்ஸ்

dosa kallu cleaning in tamil

தோசை கல் சுத்தம் செய்வது எப்படி.?

தோசை கல்லை விளக்குவது மிக கஷ்டமான வேலை. எவ்வளவு தான் வழக்கினாலும் அதில் உள்ள துரு, எண்ணெய் பசை நீங்காது. அப்படியே அந்த துரு இருந்தால் நாளடைவில் தோசை ஊற்றினால் வராது. அதற்கு பிறகு என்ன செய்வீர்கள். தோசை கல் வீண் ஆகிவிட்டது என்று புது தோசை கல் வாங்குவீர்கள். இனி இந்த மாதிரி கஷ்ட படாமல் ஈசியாக தோசை கல்லை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகளை காண்போம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள 10 கிச்சன் டிப்ஸ்

தோசைக்கல்லை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை பழம் – 1
  • கல் உப்பு – 1தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அடுப்பை பத்த வையுங்கள். பின் அடுப்பில் தோசை கல்லை வைக்கவும். மிதமான தீயிலே தோசை கல் சூடு ஆக வேண்டும். சூடு வந்ததும் தோசை கல் மேல்புறத்தில் 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்க்கவும்.

தோசை கல் சுத்தம் செய்வது எப்படி

பின் பாதி எலுமிச்சை பழம் எடுத்து கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தின் பின் பகுதியில் குச்சி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி குத்தி கொள்ளுங்கள். இப்போது  குத்திவைத்த எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி  தோசை கல்லை தேய்க்க வேண்டும்.

ஒரு 10 நிமிடத்திற்கு தேய்க்க வேண்டும். மிதமான தீயிலே வைத்து தேய்க்கும் போது தோசை கல்லில் இருக்கும் துரு, எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

10 நிமிடம் கழித்து தோசை கரண்டி பயன்படுத்தி தேய்த்தால் துரு வந்துவிடும்.

அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் வழக்குவது போல் வழக்க வேண்டும். பின் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, துணியை வைத்து துடைக்க வேண்டும்.

தீய்ந்து போன கல்லை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • புளி – சிறிதளவு
  • பல் தேய்க்கும் பேஸ்ட் – சிறிதளவு

செய்முறை:

தோசை கல்லை அடுப்பில் வைத்து மறந்து விடுவோம். தீ அதிகமாக போனால் தீய்ந்து போகி விடும். தோசை ஊற்றினாலும் வராது. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் செய்யுங்கள்.

தோசை கல்லில் பல் தேய்க்கும் பேஸ்ட் சேர்த்து விளக்கவேண்டும். அதன் பிறகு எண்ணெய் சிறிதளவு சேர்த்து, புளியை வைத்து தேய்த்தால் தீய்ந்தது சரி ஆகிவிடும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com