துரு பிடித்த தோசை கல்லை 10 நிமிடத்தில் புதியது போல் மாற்றிடலாம்.. இந்த ஒரு டிப்ஸைமட்டும் பாலோ பண்ணுங்க..

Advertisement

தோசை கல் கிளீனிங் டிப்ஸ் – Dosa Kallu Cleaning Tips Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. கிட்சன் கிளினிங்க டிப்ஸில் நாம் பார்க்க இருப்பது துருப்பிடித்த தோசை கல்லை வெறும் பத்தே நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்யலாம் என்று தான் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் துரு பிடித்த தோசை கல் இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நாள் ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • கல் உப்பு – ஒரு கைப்பிடியளவு
  • எலுமிச்சை – இரண்டு
  • வினிகர் – 1/4 கப்
  • பாமாயில் – தேவையான அளவு
  • பல் துலக்கும் பேஸ்ட் – ஒரு ஸ்பூன்

 இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிச்சனில் இருக்கும்போது இந்த டிப்ஸ Follow பண்ணுங்க..! வேலை எளிதில் முடியும்..!

சுத்தம் செய்யும் முறை:

அடுப்பில் துரு பிடித்த தோசை கல்லை வைத்து நன்கு சூடுபடுத்தவும், தோசை கல் நன்கு சூடானதும் அடுப்பு தீயை முழுமையாக குறைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் கல் உப்பு ஒரு கையளவு சேர்த்து நன்றாக தோசை கல் முழுவதும் பரப்பிவிடுங்கள்.

பிறகு அவற்றில் ஒரு எலுமிச்சை சாறினை பிழிந்து ஊற்றவும், பிறகு அந்த எலுமிச்சை தோலை கொண்டுநன்றாக தேய்க்கவும். தோசை கல் நன்கு சூடாக இருக்க ஸ்பூன், அல்லது Fork ஏதாவது ஒன்றை கொண்டு எலுமிச்சை பல தோலினை அவற்றில் மாட்டி தோசை கல்லை 5 நிமிடம் வரை தேய்க்கவும்.

பின் அவற்றில் 50 கிராம் பாமாயிலை ஊற்றி அந்த தோசை கல் முழுவதும் பரப்பிவிடவும்.

பின்பு தோசை கல்லில் கொட்டிய உப்பினை சுத்தமாக அவற்றில் இருந்து எடுத்துவிடவும். பின்பு வாழைத்தண்டை கொண்டு அந்த தோசை கல்லை ஒரு 10 நிமிடம் தேய்க்கவும்.

பிறகு தோசை கல்லை சுத்தமாக கழுவவும், கழுவிய பின் ஒரு கப்பில் வினிகர் மற்றும் பல் துலக்கும் பேஸ்ட் இவை இரண்டியும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை அந்த துரு பிடித்த தோசை கல்லில் ஊற்றி நன்றாக ஸ்க்ரப்பரை கொண்டு தேய்க்கவும்.

தேய்த்தபின் மறுபடியும் தோசை கல்லை சுத்தமாக கழுவி அவற்றில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை துடைத்து எடுக்கவும்.

பின் அவற்றில் சமையல் எண்ணெயை தடவி வெயிலில் குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் காயவைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து வெயிலில் இருந்து தோசை கல்லை எடுத்துவிடலாம், பின் அவற்றிலிருக்கும் எண்ணெயை சுத்தமாக துடைத்து விடுங்கள். பிறகு அவற்றில் தோசை ஊற்றி மாறுங்கள் மிவும் சூப்பராக வெந்து வெறும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி மணிக்கணக்கில் நின்னு பாத்திரம் தேய்க்க வேண்டாம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement