தோசை கல்லில் ஓட்டும் தோசையை உடனே சரி செய்ய இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

தோசை கல் clean பண்ணுவது எப்படி?தோசைக்கல் சுத்தம் செய்யும் முறை | Dosa Kallu Cleaning in Tamil 

Dosa Kallu Cleaning Tips – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ள டிப்ஸாக தான் இருக்கும். அதாவது பொதுவாக அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக காலை மற்றும் இரவு உணவுகளுக்கு தோசை ஊற்றும் பழக்கம் இருக்கும். ஏனென்றால் தோசை ஊற்றுவது என்பது மிகவும் எளிதான வேலை, மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றும் சொல்லலாம். இருப்பினும் சில சமயங்களில் தோசை ஊற்ற பயன்படுத்தும் தோசை கல்லில் சப்பாத்தி சுற்றுப்போம் அல்லது மீன் வருத்துருப்போம் இப்படி செய்யும் போது மாரு முறை அந்த தோசை கல்லில் தோசை ஊற்றும் போது. தோசை ஒழுங்காக வராது தோசை அந்த தோசை கல்லிலேயே நன்றாக ஒட்டிக்கொள்ளும். அந்த பிரச்சனையை உடனே சரி செய்ய ஒரு அருமையான டிப்ஸ் இருக்கிறது அதனை பற்றி தெரிந்து கொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.

தோசை கல்லில் ஓட்டும் தோசையை உடனே சரி இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

ஸ்டேப்: 1

முதலில் தோசை கல்லில் ஒட்டிக்கொண்ட தோசையை தோசை திருப்பியை பயன்படுத்தி கல்லில் பிடித்துக்கொண்டிருக்கும் தோசையை முழுமையாக அகற்றவும்.

ஸ்டேப்: 2

பிறகு அடுப்பை பற்றவைத்து அந்த தோசை கல்லை வைக்கவும். தோசை கல் சூடானதும் 1/2 டம்ளர் தண்ணீரை தோசை கல்லில் தெளித்து விடவும்.

ஸ்டேப்: 3

பிறகு ஒரு சுத்தமான துண்டை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த துண்டை பயன்படுத்தி தோசை கல்லில் உள்ள தண்ணீரை சுத்தமாக துடைக்கவும்.

ஸ்டேப்: 4

பிறகு அந்த தோசை கல்லில் நன்கு எண்ணெய் தடவ வேண்டும்.

ஸ்டேப்: 5

பிறகு மீண்டும் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு தண்ணீரை சுத்தமாக துடைக்கவும்.

ஸ்டேப்: 6

 

அவ்வளவு தான் பிரண்ட்ஸ் கிளீனிங் ப்ராசஸ் இப்பொழுது நீங்கள் தோசை ஊற்ற ஆரம்பிக்கலாம். இப்பொழுது தோசை ஊற்றினால் நன்கு மொறு மொறுனு ஈசியான  தோசை வந்து விடும்.

ஒரு முறை இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணுங்க நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 உங்கள் வீட்டிலில் மிதியடிகளை துவைக்க கஷ்டப்படுவீர்களா? அப்படினா அது உங்களுக்கான பதிவு தான்!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement