கோடைக்காலத்தில் தோசைமாவு புளிக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Idli Maavu Pulikamal Iruka Tips

தோசை மாவு புளிக்காமல் இருக்க

நம்முடைய வீட்டில் அதிகமாக செய்யும் சாப்பாடு என்றால் அது இட்லி மற்றும் தோசை தான். ஆனால் அதற்கு தயார் செய்யும் மாவினை நாம் தினமும் அரைக்க முடியாது. ஏனென்றால் அவற்றை தினமும் அரைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை. சரி இரண்டு நாட்களுக்கு சேர்த்து தோசை மாவினை அரைத்து வைக்க வேண்டும் என்றால் மாவு புளித்து போகிவிடுகிறது என்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதுவும் இப்போது வெயில் காலம் வேற வந்துவிட்டது ஆகையால் நாம் என்ன தான் பார்த்து பார்த்து மாவு அரைத்து வைத்தாலும் தோசை மாவு உடனே புளித்து விடும். எனவே வெயில் காலத்திலும் தோசை மாவு புளிக்காமல் இருப்பதற்கான டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dosai Maavu Pulikamal Iruka:

தோசை மாவு புளிக்காமல் இருக்க

நீங்கள் வழக்கம் போல் தேவையான அளவு அரிசி மற்றும் உளுந்தினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை சுத்தும் செய்து விட்டு கிரைண்டரில் போட்டு மாவு அரைக்கும் பதத்தில் அரைத்து வைத்து விடுங்கள்.

இவ்வாறு செய்த பிறகு மாவு புளிக்காமல் இருப்பதற்கான டிப்ஸினை ஒவ்வொன்றாக பார்க்கப்போகிறோம்.

டிப்ஸ்- 1 

 இட்லி மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

மாவு அரைத்து வைத்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்த பிறகு அதனுடன் 1 வெற்றிலையை காம்புடன் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு நீங்கள் மாவினை வழக்கம் போல பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த முறையில் செய்தால் இட்லி மாவு கோடைகாலத்தில் புளிக்காது.

டிப்ஸ்- 2

 idli maavu pulikamal iruka tips

ஓமவல்லி இலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. அந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடலில்ன் உள்ள நிறைய பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

ஆனால் ஓமவல்லி இலை இதற்கு மட்டும் இல்லாமல் தோசை மாவு புளிக்காமல் இருப்பதற்கும் பயன்படுகிறது. ஆகையால் தோசை மாவு அரைத்து உப்பு போட்டு கலந்த பிறகு அதில் 5 ஓமவல்லி இலையினை போட்டு விட்டால் போது ஓமவல்லி இலையின் காரத் தன்மை மாவினை புளிக்க செய்யாது.

எலி தொல்லை இல்லாமல் இருக்க வீட்டில் இதை மட்டும் செய்தால் போதும்..! உடனே அதற்கான பலன் தெரியும்..!

டிப்ஸ்- 3

மூன்றாவது டிப்ஸ் என்னவென்றால் நீங்கள் தோசை மாவு அரைத்தவுடன் அவற்றில் அனைத்திலும் உப்பு போட்டு கலந்து வைக்க கூடாது. இப்படி செய்தால் மாவு மிகவும் எளிதாக புளித்து விடும்.

ஆகையால் தோசை மாவு அரைத்த பின்பு அதில் உங்களுக்கு தேவைப்படும் மாவில் மட்டும் உப்பு போட்டு கலந்து கொண்டு மீது உள்ள மாவினை பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மீண்டும் உங்களுக்கு மாவு தேவைப்பட்டால் அப்போது உப்பு போட்டு கலந்து கொண்டு தோசை ஊற்றி கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் வெயில் காலத்தில் மாவு புளிக்காமல் இருக்கும். இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் மாவினை சரியான பதத்தில் அரைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil