தோசை கல்லில் தோசை ஒட்டாமலும், பிஞ்சு போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Dosai Ottamal Seivathu Eppadi

பொதுவாக தினமும் செய்யும் இட்லி அல்லது தோசை என இந்த இரண்டில் எது உங்களுக்கு அதிகமாக பிடிக்கும் என்றும் கேட்டால் 10 எப்படியும் 9 நபர்கள் தோசை என்று தான் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் நீரில் அவித்து சாப்பிடக்கூடிய இட்லி தான் நமது உடலுக்கு நல்லது. ஆனால் இட்லி சாப்பிட வேண்டாம் என்று மறுக்கும் யாரும் தோசை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்வது இல்லை. அதிலும் தோசையில் மசாலா தோசை, ஆனியன் தோசை, முட்டை தோசை என இவ்வாறு பல்வேறு வகைகள் இருக்கிறது. இப்படி பல்வேறு வகைகளில் இருக்கும் தோசையை சாப்பிடுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் அதனை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் நாம் செய்யும் தோசை பெரும்பாலும் கல்லிலேயே ஒட்டி கொள்ளும். அதனால் தோசை மாவினை ஊற்றி அதனை திருப்பி போட்டு எடுப்பதற்குள் 1 யூகமே ஆகிவிடும். ஆகவே இன்றைய பதிவில் தோசை கல்லில் தோசை ஒட்டாமலும், பிஞ்சு போகாமலும் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தோசை கல்லில் தோசை வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்:

டிப்ஸ்- 1 

தோசை மாவு ப்ரிட்ஜ் இருந்து எடுத்தால் அதனை அப்படியே தோசை ஊற்றக்கூடாது. இவ்வாறு ஊற்றினால் தோசை சரியாக வராது. அதனால் தோசை மாவினை சிறிது நேரம் வெளியே வைத்த பிறகு தான் தோசை ஊற்ற வேண்டும்.

டிப்ஸ்- 2

தோசை கல்லில் தோசை ஊற்றுவதற்கு முன்பாக அதிகமாக எண்ணெய் ஊற்றக்கூடாது. ஏனென்றால் அதிகமாக எண்ணெய் ஊற்றினால் மாவு எண்ணெய்யில் ஒட்டிக்கொள்ளும். பின்பு தோசை எடுப்பதுதற்கு கடினமாக இருக்கும்.

ஆகவே தோசை ஊற்றுவதற்கு முன்பாக சிறிது தேய்த்தால் போதும், பின்பு வேண்டுமானால் எண்ணெய் அதிகமாக ஊற்றிக்கொள்ளலாம்.

டிப்ஸ்- 3

தோசை கல்லில் தோசை வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

தோசை கல் நன்றாக காய்ந்த பிறகு, அதாவது சூடு வந்த பிறகே தோசை ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்யாமல் கல் காய்வதற்கு முன்பே தோசை ஊற்றினால் தோசை வராது.

டிப்ஸ்- 4

இரும்பு தோசை கல்லாக இருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் விலக்கினால் தோசை வராது. ஆகவே தோசை கல்லை விலக்கியவுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை அதில் தடவி வைத்து விட்டு பின்பு தோசை ஊற்ற வேண்டும்.

டிப்ஸ்- 5

அதேபோல் தோசை மாவிற்கு பதம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால் சரியான பதத்திற்கு தோசை மாவினை அரைத்து தோசை ஊற்ற வேண்டும்.

துரு பிடித்த தோசை கல்லை 10 நிமிடத்தில் புதியது போல் மாற்றிடலாம்.. இந்த ஒரு டிப்ஸைமட்டும் பாலோ பண்ணுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement