வெள்ளை சட்டை நிறம் மாறாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!

Advertisement

வெள்ளை சட்டை நிறம் மாறாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..! Dress Washing Tips in Tamil

வெள்ளை நிறத்தில் உள்ள உடைகளில் கறைபட்டுவிட்டது என்றால் நீங்கள் அந்த கறைகளை அகற்ற ரொம்ப கஷ்ட்டப்பட்டு துணி தொவைக்கணும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை. மேலும் அவற்றில் கறை நீங்கவில்லை என்றால் அதனை தூக்கி எறிந்துவிட வேண்டாம். நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மிக எளிதாக வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள உடைகளை அகற்றிவிடலாம் அது எப்படி என்று இன்றைய பதிவில் முழுமையா மற்றும் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dress Washing Tips in Tamil: 1Dress Washing Tips

வெள்ளை சட்டையில் அல்லது உடைகளில் அழுக்கு பட்டுவிட்டது என்றால் அதனை எளிதாக அகற்றிவிடலாம். இதற்கு நமக்கு தேவைப்படும் ஒரே ஒரு பொருள் ஷாம்பு தான். நீங்கள் தலைக்கு எந்த வகை ஷாம்பு பயன்படுத்தினாலும் பரவா இல்லை அதனை பயன்படுத்தி துவைத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியம் படுவீர்கள். அழுக்கு உள்ள இடத்தில் ஷாம்பை போட்டு தேய்த்துவிட்டு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் நன்றாக தேய்த்து துவைக்கவும். இப்படி செய்தால் அவற்றில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

டிப்ஸ்: 2

வெள்ளை நிறத்தில் உள்ள உடைகளை எப்பொழுது தனியாகவே துவைக்கவும், மற்ற நிற உடைகளுடன் சேர்த்து ஊறவைத்து துவைத்தால் அவற்றில் உள்ள சாயங்கள் உங்கள் வெள்ளை சட்டையில் படிந்துவிடும். ஆக வெள்ளை சட்டையை தனியாகவே ஊறவைத்து துவைக்கவும்.

டிப்ஸ்: 3

வெள்ளை சட்டையில் கறை பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம், அதற்கும் டிப்ஸ் இருக்கிறது. சோடா உப்பை கறை உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் அவற்றில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும். பிறகு எப்பொழுதும் போல துணியை துவைக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!

டிப்ஸ்: 4

நாம் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்டை கூட வெள்ளை சட்டையில் படித்துள்ள கறையை நீக்குவதற்கு பயன்படுத்தலாம். கறை உள்ள இடத்தில் டூத் பேஸ்டை கொண்டு தேய்த்தாலும் கறைகள் அகன்று விடும்.

டிப்ஸ்: 5

உடலில் எண்ணெய் பட்டுவிட்டது என்றால் வெள்ளை சாக்பீஸ், முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர், விபூதி இதில் ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து துணிய எப்பொழுது போல துவைத்து எடுத்தால் அவற்றில் உள்ள எண்ணெய்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

டிப்ஸ்: 6Dress Washing Tips

பொதுவாக நாம் அனைத்து துணிகளையும் ஒரே மாதிரி துவைக்க கூடாது. எந்த துணி எப்படி துவைக்க வேண்டும் என்று அந்த துணியிலையே எழுதப்பட்டிருக்கும், அது போன்று துணியை துவைத்தால் துணி நீண்ட நாள் வரை இருக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement