தேங்காய் வேஸ்ட் ஆனால் இனிமேல் தூக்கிப் போடாதீங்க.. அதையும் இப்படி பயன்படுத்தலாம்..!

Advertisement

வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் காய்ச்சும் முறை – Waste coconut use hair growth in tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. நமது சமையலறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களை வீணடிக்கின்றோம் அவற்றில் ஓன்று தான் தேங்காய். பொதுவாக தேங்காய் சமைப்பதற்கு பெரும்பாலும் தேவைப்படும் உணவு பொருட்களில் ஓன்று. இதனால் வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி, கோயில்களிலும் சரி அதிகளவு தேவைப்படும் பொருளாகும். தேங்காயை அதிகளவு வாங்கி வைத்திருந்தாலும் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு காய்ந்து போகும் அல்லது அழுகி போகும்.

அவ்வாறு காய்ந்து போன தேங்கையினை இனி குப்பையில் தூக்கி எறியவேண்டும். அதனை பயன்படுத்தி மிக எளிதாக நாமே தேங்காய் எண்ணெய் தயார் செய்யலாம் அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் இந்த மாதிரி இருந்தா இனிமேல் தூக்கிப் போடாதீங்க – Dry coconut using tips in tamil:

தேங்காய்

மேல் காட்டியுள்ளது போல் உங்கள் வீட்டில் தேங்காய் இருக்கிறது என்றால் அதனை எடுத்து சுத்தமாக கழுவவும்.

பிறகு சிறு சிறு துண்டுகளாக தேங்காய் சில்களை கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 டம்ளர் காட் வாட்டர் போதும் கருத்த கேஸ் பர்னர் பளிச்சென்று மாற..!

பின் அவற்றில் தேங்காய் பால் பிழிந்து பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள், மீண்டும் ஒருமுறை அதனை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து, மீண்டும் வடிகட்டி பால் பிழிந்து அந்த பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு அந்த பாட்டிலை மூடி 4 முதல் 5 மணி நேரம் வரை வைத்திருக்கவும். பிறகு அதனை திறந்து பார்த்தால் அவற்றில் தண்ணீர் கீழே இறங்கு பாட்டிலின் மேல் பகுதியில் ஒரு கிரீம் போன்று இருக்கும் அந்த கிரீமை மட்டும் தனியாக எடுத்து ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, மிதமான தீயில் நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அவற்றில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிய எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைக்கவும், ஆறியதும் எண்ணெயை ஏதாவது காட்டன் துணியிலோ அல்லது வடிகட்டியலோ வடிகட்டி எடுத்தால் போதும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாராகிவிடும்.

இந்த தேங்காய் எண்ணெய்யை நீங்கள் தயக்கமில்லாமல் தலைக்கு கூந்தல் எண்ணெயை பயன்படுத்தலாம், நல்ல வாசனையாக இருக்கும். கண்டிப்பாக இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எண்ணெய் பிசிபிசிப்பு முதல் வெங்காயம் கெட்டு போகாமல் இருப்பது வரைக்கும் டிப்ஸ்

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement