Dupattavil Sayam Pogamal Iruka Tips
பொதுவாக நாம் எந்த ஒரு ஆடை வாங்கினாலும் அது முதலில் சாயம் போகாமல் எப்போதும் ஒரே நிறத்தில் இருக்குமா என்று பார்த்து தான் வாங்குவோம். இவ்வாறு பார்த்து வாங்கினாலும் கூட சில ஆடைகள் துவைத்த ஓரிரு முறைகளிலேயே சாயம் போய்விடுகிறது. அதுவும் குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் துப்பட்டாவில் தான் சாயமானது அதிகமாக போகும். அந்த துப்பட்டாவை நாம் அடிக்கடியும் வாங்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு சுடிதாருக்கும் ஒவ்வொரு வண்ண துப்பட்டா இருக்கும். ஆகையால் சாயம் போகின்ற துப்பட்டாவிற்கு பதிலாக மீண்டும் ஒன்று வாங்க வேண்டும் என்றால் நமது பட்ஜெட் ஆனது எங்கயோ போகி தான் நிற்கும். அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கான ஒரு டிப்ஸாக துப்பட்டாவில் சாயம் போகாமல் இருக்க ட்ரை பண்ண செய்ய டிப்ஸினை தான் பார்க்கபோகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஷாலில் (அ) சாயம் போகாமல் இருக்க டிப்ஸ்:
குறிப்பு: 1
முதலில் ஒரு வாளியில் தேவையான அளவு குளிர்ந்த தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரில் 2 ஸ்பூன் அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக உப்பு நன்றாக கரைந்த பிறகு அதில் ஏதேனும் ஒரு துப்பட்டாவை போட்டு 10 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து புதிய தண்ணீரில் எதுவும் அலசாமல் துப்பட்டாவை பிழிந்து மட்டும் காய போடுங்கள்.
குறிப்பு: 2
அதேபோல் நீங்கள் ஷாலை துவைத்த பிறகு போதுமான அளவு வெயிலில் காய போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஷாலை அதிக வெயிலில் காய போடுவதினாலும் சாயம் போகும் வாய்ப்புகள் உள்ளது.
இரண்டே நிமிடத்தில் அழுக்கு படிந்த வெள்ளை சட்டையை கறை இல்லாமல் பளிச்சென்று மாற்றலாம்
குறிப்பு: 3
இது மட்டும் இல்லாமல் துப்பட்டாவை நீங்கள் கல் உப்பு கொண்டு பயன்படுத்தாமல் சாதாரணமாக துவைத்து முடித்த பிறகு அதனை சூடான தண்ணீரில் அலசாமல் குளிர்ந்த தண்ணீரில் தான் அலச வேண்டும்.
குறிப்பு: 4
துணிகளை துவைக்கும் போதோ அல்லது அதனை துணி துவைக்கும் பவுடரில் ஊற வைக்கும் போதும் எப்போதும் சாயம் போகும் துணிகளுடன் ஒன்றாக சேர்த்து ஊற வைக்கக்கூடாது.
ஆகவே துணிகளை பிரித்து தான் ஊற வைக்க வேண்டும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
நிமிடத்தில் வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சுன்னு இருக்கணுமா
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |