ஒட்டடை அடிப்பதில் இப்படி ஒரு Tricks இருக்கா தெரியாம போச்சே..!

dust cleaning tips in tamil

Dust Cleaning Tips in Tamil

வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு வெறுத்து போய்விடும். ஏனென்றால் நீங்கள் பார்த்து பார்த்து வீட்டை சுத்தம் செய்து வைத்து இருப்பீர்கள். ஆனால் ஒட்டடை அல்லது சில வகை பூச்சிகளால் வீடு அப்படியே நீங்கள் சுத்தம் செய்ததிற்கு எதிர் மாறாக மாறிவிடும். எனவே நீங்கள் இனி இதுமாதிரி கஷ்டப்படாமல் இருக்க இன்றைய டிப்ஸ் பதிவானது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். சரி வாங்க அப்படி என்ன டிப்ஸ் அதுவென்று தெரிந்துகொண்டு உங்கள் வீட்டிலும் செய்து பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

House Cleaning Tips Tamil:

ottdai adithal

 

உங்களுடைய வீட்டில் இருக்கும் ஒட்டடையை வழக்கம் போல் சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அந்த குச்சியை ஒரு காட்டன் துணியால் சுற்றிக் கட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் பூஜைக்கு வைத்து இருக்கும் சூடத்தை கரைத்து விடுங்கள். அதற்கு பின்பு துணி கட்டி வைத்துள்ள குச்சியை வாளியில் இருக்கும் தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக தண்ணீரில் நனைத்த அந்த குச்சியால் ஒட்டடை அடிப்பது போல் கதவு, ஜன்னல் மற்றும் வீட்டின் உள்ளே இருக்கும் இடங்களிலும் சுத்தம் செய்யுங்கள். இது மாதிரி செய்தால் வீட்டில் ஒட்டடை மற்றும் எந்த விதமான பூச்சிகளும் வராமல் இருக்கும்.

Mosquito Net Cleaning Tips Tamil: 

Mosquito Net cleaning tamil

உங்கள் வீட்டில் கொசு வலை இருந்தால் அதில் அதிகமாக பூச்சிகள் வரும் அதுமட்டும் இல்லாமல் பூச்சிகள் சில நேரத்தில் முட்டையை கொசு வலையில் இட்டு விட்டு சென்று விடும். அதனால் இனிமேல் இது மாதிரி ஆகாமல் இருக்க முதலில் நீங்கள் ஒரு அகலமான வாளியில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த தண்ணீருடன் Detele 1 ஸ்பூன் மற்றும் ஷாம்பு சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது கலந்து வைத்துள்ள தண்ணீரில் கொசு வலையை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.

5 நிமிடம் கழித்ததும் கொசு வலையை வெளியே எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி விடுங்கள். இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டு கொசு வலையில் பூச்சிகள் எதும் வராமல் புத்தம் புதியது போல இருக்கும். 

இதனை நீங்கள் ஜன்னலில் ஓட்டி இருக்கும் Mosquito Net-ற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். 

Maap Cleaning Tips in Tamil:

Maap Cleaning Tips in Tamil

வீட்டில் மாப் போடுவதற்கு முன்பு எப்போதும் ஒட்டடை இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாப் போட வைத்திருக்கும் தண்ணீருடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அந்த தண்ணீரால் வீட்டில் மாப் போடுங்கள்.

இது மாதிரி நீங்கள் மாப் போட்டால் வீட்டின் தரையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதுவும் வராமல் தடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்⇒ டாய்லெட்டில் கரப்பான் பூச்சி மற்றும் நாற்றம் வராமல் பிரஷ்ஷாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil