ஈ தொல்லை நீங்க | E Thollai Neenga Tamil Tips
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் மிகவும் பயனுள்ள தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது பல இடங்களில் ஈக்கள் அதிகளவு மொய்த்துக்கொண்டே இருக்கும். அதனை பார்த்தாலே அருவருப்பாக நினைப்போம். அதிலும் வீட்டில் உணவு, ஸ்னாக்ஸ், பானம் எதுவாக இருந்தாலும் சரி அவை சில சமயம் திறந்திருக்கும் போது அவற்றில் வந்து ஈக்கள் அமர்த்துக்கொள்ளும். பிறகு அதனை சாப்பிடுவதற்கே துளிகூட விருப்பம் இருக்காது. உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளதா? அப்படி என்றால் அந்த கவலைய விடுங்கள். இன்னைக்கி நாம வீட்டிலேயே இக்கலை விரட்டி அடிக்க கூடிய ஒரு திரவத்தை தான் தயார் செய்ய போகிறோம். அதனை தயார் செய்து வீடு முழுவது ஸ்ப்ரே செய்தீர்கள் என்றால் அதன் பிறகு உங்கள் வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது. சரி வாங்க அது எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
- சுத்தமான பவுல் – 1
- டூத் பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
- ஷாம்பு – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- கற்பூரம் – 2
- ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று
ஈ விரட்டி செய்முறை:
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் பேஸ்ட், ஒரு ஸ்பூன் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கற்பூரம் நன்கு பொடி செய்தது ஆகியவற்றை சேர்க்கவும்.
பின் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலந்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஈ விரட்டி ஸ்ப்ரே தயார்.
தயார் செய்த இந்த கலவையை ஒரு பாட்டிலில் செய்து வீடு முழுவது நன்றாக ஸ்ப்ரே செய்து விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை உங்கள் வீடு முழுவது ஸ்ப்ரே செய்தீர்கள் என்றாலே போதும், இவற்றில் உள்ள வாசனைக்கு ஈக்கள் உங்கள் வீட்டின் பக்கத்திற்கு திரும்ப வரவே வராது.
ஒரு முறை இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருந்தால் கண்டிப்பாக பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு சேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்..!
இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |