Easy House Cleaning Tips
பொதுவாக சுத்தம் என்பது நம்முடைய ஆரோக்கியத்திற்காக மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த வீட்டை சுத்தம் செய்வது என்பது சாத்தியமற்ற ஒரு செயலாக இது நாள் வரையிலும் இருக்கிறது. நாமும் என்ன என்னவோ வீடு சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற கடையில் விற்கும் பொருட்கள் வாங்கி பயன்படுத்து இருப்போம். அவற்றை பயன்படுத்தினாலும் கூட வீட்டை நீண்ட நேரம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைப்பது இல்லை. அதனால் தான் வீட்டில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வீடு எப்போதும் சுத்தமாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைத்திருப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வீட்டை சுத்தம் செய்வது எப்படி..?
வீட்டை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு ஜெல் தயார் செய்ய வேண்டும். அதனை எப்படி தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு பழத்தோல்- சிறிதளவு
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
- வினிகர்- 1 ஸ்பூன்
- பாத்திரம் கழுவும் ஜெல்- 1 ஸ்பூன்
இதையும் படியுங்கள்⇒ உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!
செய்முறை:
ஸ்டேப்- 1
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் எடுத்துவைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 2
10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது அந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து 2 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.( குறிப்பு: கையினால் வினிகரை ஊற்றி கலக்க கூடாது. அதற்கு பதிலாக குச்சியினை பயன்படுத்துவும்)
ஸ்டேப்- 4
2 நிமிடம் கழித்து இப்போது அதனுடன் பாத்திரம் கழுவும் ஜெல் 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் இதனை 10 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த ஜெல்லுடன் குளிர்ந்த தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கடைசியாக ஒரு முறை கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் வீடு சுத்தம் செய்யும் ஜெல் தயார் ஆகிவிட்டது.
டூத் பேஸ்ட்டை வைத்து பாத்ரூமை வாசனையாக வைக்க முடியுமா.? |
சுத்தம் செய்தால்:
தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை வீடு, பாத்ரூம் மற்றும் சிங்க் என அனைத்து இடங்களிலும் தெளித்து விட்டு 10 நிமிடம் கழித்து வீட்டை வழக்கம் போல சுத்தம் செய்யுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீடு சுத்தமாகவும் மற்றும் பளபளப்பாகவும் ஆகிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |