Easy Kitchen Cleaning Tips in Tamil
வீட்டில் தினமும் சமைப்பது தான் கடினமான வேலை என்று சிலர் நினைத்து இருப்பார்கள். ஆனால் சமைப்பதை விடவும் மிகவும் கஷ்டமான வேலை பாத்திரங்களை கழுவதும் சமையலறையை சுத்தம் செய்வதும் தான். சமையல் செய்யும் பாத்திரம் மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் மற்ற பாத்திரங்கள் டைல்ஸ் போன்றவற்றை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆகையால் இப்படி கஷ்டப்படும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இன்றைய பதிவு இருக்கும். 10 நிமிடத்தில் அனைத்தையும் சுத்தம் செய்து புதியது போல பளபளக்க செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Easy Kitchen Cleaning Tips and Tricks in Tamil:
Tips 1:
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு வினிகரை சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் இதனை எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடங்களில் தேய்த்து சுத்தம் செய்தல் கறைகள் நீங்கி பளீச் என்று மாறிவிடும்.
இந்த பேஸ்ட்டை சிங்கு துவாரங்களில் தெளித்து சுத்தம் செய்தால் துறுநாற்றம் நீங்கிவிடும்.
பாத்திரத்தில் உள்ள விடாப்பிடி கறைகள் நீங்க:
Tips 2:
உங்கள் பாத்திரங்களில் படிந்துள்ள பிடிவாதமாக கறைகளை போக்க பேக்கிங் சோடா சிறந்தது.
பேக்கிங் சோடா சிறிது தண்ணீர் சேர்த்து அதனை உங்கள் பாத்திரங்களில் தெளித்து சிறிது நேரம் ஊறிய பின்னர் ஸ்க்ரப் பயன்படுத்தி சுத்தம் செய்தால் கறைகள் எளிதில் நீங்கி விடும்.
Tips 3:
பீங்கான், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்ய ஆலிவ் எண்ணெய் சிறந்தது.
ஆலிவ் எண்ணெயை ஒரு காட்டன் துணியில் தொட்டு கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களில் தேய்த்து கொள்ளவும். பின்னர் அதனை சுத்தம் செய்தால் பளீச் என்று மாறிவிடும். சுத்தம் செய்வதும் எளிது.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |