Kitchen Tips
சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் அதை நிமிடத்திற்கு நிமிடம் சுத்தம் செய்து Tired-ஆ ஆகிவிடுவார்கள். உங்களின் கிச்சன் வேலைகளை ஈசியாக செய்திட இந்த பதிவில் உள்ள டிப்ஸை Follow பண்ணுங்க. அதற்கு இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
Kitchen Tips:
காய்கறி நறுக்கும் முறை:
காய்கறி நறுக்கும் போது அதிலுள்ள தோல்கள் காம்புகள் போன்றவற்றை ஒரு டப்பாவில் போட்டு விட்டால் அதை தனியாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
சப்பாத்தி:
சப்பாத்தி போடும் போது கட்டையின் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு கொள்ளவும். இப்படி செய்வதினால் கோதுமை மாவு கீழே சிந்தாது. பேப்பரை மட்டும் எடுத்து வெளியில் போட்டு விடலாம்.
மிக்சி ஜார்:
மிக்சி ஜாரில் அரைத்த பிறகு 2 தேக்கரண்டி சாமான் விளக்கும் லீகுய்ட் சேர்த்து மிக்சியை ஒரு தடவை சுற்ற வேண்டும். இப்படி செய்வதினால் பிளேடுக்கு உள்ளே உள்ள அழுக்குகள் வரைக்கும் வந்துவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!
சமைக்கும் போது:
நீங்கள் கேசில் சமைக்கும் போது கேஸை சுற்றி நியூஸ் பேப்பரை போட வேண்டும். இப்படி செய்வதினால் சுற்றி உள்ள இடங்கள் அழுக்காகாமல் சுத்தமாக இருக்கும்.
ஜின்க்:
ஜிங்கிள் கீழே மிதியடி போட வேண்டும். ஏனென்றால் நீங்கள் சிங்கை பயன்படுத்தும் போது தண்ணீர் கீழே சிந்தாமல் மிதியடி தடுத்துவிடும்.
கேஸ்:
நீங்கள் சமைத்து முடித்த உடனே ஈர துணியை பயன்படுத்தி துடைத்து விட்டால் புதுசு போலவே இருக்கும்.
பிரிட்ஜ்:
வாரத்தில் ஒரு நாள் பிரிட்ஜில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு அதில் உள்ள கண்ணாடிகளையும் சுத்தம் செய்து விட்டு மறுபடியும் வைக்கவும்.
நீங்கள் மாவு, குழம்பு, சட்னி போன்ற பொருட்களை வைக்கும் போது அந்த பாத்திரத்தை சுற்றி துடைத்துவிட்டு வைக்க வேண்டும். ஏனென்றால் மாவு,குழம்பு போன்றவை பாத்திரத்தில் வழிந்திருக்கும் அதை அப்படியே வைத்தால் பிரிட்ஜ் அழுக்காகிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ கிரைண்டரில் உளுந்து மாவு நிறைய வருவது முதல் ஹீட் ஆவதை சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |