Easy Kitchen Tips in Tamil
பெண்கள் அனைவரும், அவர்கள் சமைக்கும் கிச்சனை சுத்தமாக வைத்து கொள்ள தான் விரும்புவார்கள். இதற்காக பெண்கள் அதிகமான நேரத்தை கிச்சனில் தான் செலவழிப்பார்கள். இருந்தாலும் கூட கிச்சனில் அழுக்கும் எண்ணெய் கரையும் சேர்ந்து கொண்டே இருக்கும். எனவே அப்படி படியும் எண்ணெய் பிசுபிசுப்பையும் அழுக்கையும் குறைக்க இப்பதிவில் சில குறிப்புகளை பார்க்கலாம் வாங்க. மேலும், கிச்சனுக்கு பயனுள்ள பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Kitchen Tips and Tricks in Tamil:
டிப்ஸ் -1
கிச்சனில் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் சேராமல் இருக்க தினமும் காலை அல்லது இரவு தூங்கும் முன்பு கிச்சனை ஈர துணி வைத்து நன்கு துடைத்து விட்டு காய வைக்க வேண்டும். மேலும், வாரத்தில் இரண்டு முறை ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் தான் கிச்சனை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
டிப்ஸ் -2
எலுமிச்சை பழம் காய்ந்து விட்டால் அதனை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு பிறகு சாறு பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.
டிப்ஸ் -3
உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை தடவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
டிப்ஸ் -4
அடுப்பின் கீழ் ஒரு அகலமான தட்டை வைத்து விட்டால் அடுப்பில் பால் அல்லது சாதம் பொங்கி விழுந்தால் கிழே உள்ள தட்டில் ஊற்றி விடும். இதனை நீங்கள் ஈசியாக சுத்தம் செய்து விடலாம்.
ஐந்தே நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் பளப்பளக்க கோலமாவு ஒன்று போதும்..!
டிப்ஸ் -6
நறுக்கி வைத்த வெங்காயம் நீண்ட நேரம் பிரஷாக இருக்க, அதில் கொஞ்சம் வெண்ணெய் கலந்து வைக்க வேண்டும்.
டிப்ஸ் -7
வாழை இலையின் பின் பக்கத்தை லேசாக நெருப்பின் அணலில் காட்டி அதன் பிறகு அதனை எவ்வளவு சுருட்டி பொட்டலம் போட்டாலும் கிழியாமல் இருக்கும்.
டிப்ஸ் -8
காலிஃப்ளவரை சமைக்கும்போது அதில் சிறிதளவு பால் சேர்த்து சமையுங்கள். இவ்வாறு சமைத்தால் அதில் பச்சை வாடை அடிக்காது. அதுமட்டுமில்லாமல், அதனுடைய நிறமும் மாறாமல் இருக்கும்.
டிப்ஸ் -9
காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி வந்ததும், அதனை தண்ணீரில் போட்டு ஒரு சில துளிகள் வினிகர் ஊற்றி வைத்தால் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் இறந்து விடும்.
வருடக்கணக்கில் வெங்காயம் அழுகாமல் இருக்க டிப்ஸ்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |