Easy Way To Clean Bathroom in Tamil
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் நாம் சூப்பரான பாத்ரூம் கிளீனிங் டிப்ஸ் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இதில் நாம் எந்த விதமான பாத்ரூம் கிளீனிங் லிக்யூடும் பயன்படுத்த போவதில்லை. வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து கரை படிந்துள்ள பாத்ரூமை நிமிடத்தில் பளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நாம் வீடுகளில் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டிய இடங்களில் முதன்மையானது பாத்ரூம் தான். பாத்ரூமில் இருந்து தன நமக்கு பல தொற்றுகள் ஏற்பட்டு நோய்களாக மாறுகிறது. எனவே, பாத்ரூம் சுத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் 5 நிமிடத்தில் கரை படிந்துள்ள பாத்ரூமை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips To Cleaning Bathroom in Tamil:
தேவையான பொருட்கள்:
- சீயக்காய் – 2 பாக்கெட்
- ஷாம்பு – 1 பாக்கெட்
- புளித்த மோர் – 1/4 கப்
- கிளீனிங் கம்பி ஸ்க்ரப்பர் – 1
முதலில், ஒரு பாத்திரம் அல்லது வாளியில் சீயக்காய், ஷாம்பு மற்றும் புளித்த மோர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த கரைசலை பாத்ரூமில் உப்பு கரை படிந்துள்ள இடங்களில் தெளித்து விட்டு கம்பி ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்த்து விடுங்கள்.
நன்கு தேய்த்து 5 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு, தண்ணீர் ஊற்றி ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு அழுக்காக உள்ள பாத்ரூமும் 5 நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும்.
நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்தால் போதும், உங்கள் வீட்டு பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
வெறும் 10 நிமிடத்தில் சிங்க் தொட்டியின் அடைப்பை போக்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |