ஆன்லைன் வழியாக இருசக்கர வாகனங்களுக்கு கடன் பெற எளிய வழிகள்!

Easy Ways to Get Bike Loan Online in Tamil

Easy Ways to Get Bike Loan Online in Tamil

இன்றைய கால கட்டத்தில் பைக் என்பது அத்யாவசிய ஒன்றாக மாறிவிற்றது. அதுவும் இல்லாமல் காரை விட பைக்கில் பயணம் செயல்வது என்பது மிகவும் எளிதாக இருக்கும். அதேபோல் பொதுவாக பல ஆண்களுக்கு பைக் வாங்குவது என்பது முதல் கனவாக இருக்கும். சிலரிடம் அதற்கான பணம் இருக்கும் உடனே வாங்கிவிடுவார்கள். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விலையுர்ந்த பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அதற்க்கு அவர்களிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்காது. இதன் காரணமாக பல வங்கிகளுக்கு சென்று இருசக்கர வாகனம் வாங்க கடன் பெற அலைவார்கள். இனி அவ்வாறு அலையவேண்டிய அவசியம் இல்லை ஆன்லைனில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் பெற விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் அது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஆன்லைன் மூலம் பைக் லோன் பெற வழி:

தற்பொழுது இன்டசுஇண்டு வங்கி (IndusInd) வாடிக்கையாளர்களுக்கு எளிய வசதி வழங்கும் விதமாக ஆன்லைன் மூலமாக வாகன கடன்களை வழங்குகிறது.

மேலும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருசக்கர வாகனக் கடன்களை வழங்குவதால், நீங்கள் முதலில் ஒரு விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிப்ஸ்: 1

அதற்கு முதலில் நீங்கள் வட்டி விகிதங்கள், விண்ணப்ப செயல்முறையின் எளிமை, வழங்குவதற்கான நேரம் போன்றவற்றில் ஒவ்வொரு விற்பனையாளர்களையும் ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

டிப்ஸ்: 2

அதனைத்தொடர்ந்து நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள விற்பனையாளரின் இணையதளத்திற்குச் சென்று இருசக்கர வாகனக் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை நிரப்ப வேண்டும்.

அதற்கு நீங்கள் சான்றுகளாக அடையாளச் சான்றுகள், வருமானச் சான்றுகள் போன்ற தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.

டிப்ஸ்: 3

அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் கடன் வாங்க விரும்பும் காலம் மற்றும் கடன் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

டிப்ஸ்: 4

உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு காலத்தில் கடனை திருப்பி செலுத்த முடியுமோ அந்த கால அளவையே நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 5

அதிக வட்டிக்கு கடன்களை வாங்கிவிடாதீர்கள் அது நீங்கள் இஎம்ஐ செலுத்தும்போது உங்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடக்கூடும்.

இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு விற்பனையாளர் உங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கடன் வழங்க நீங்கள் தகுதியானவர்களா என்பதை சரி பார்த்து அவர்கள் உங்களுக்கு இரு சக்கர வாகனக் கடனை எந்த நேரத்திலும் அங்கீகரிக்கலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil