வீடு எப்பொழுதும் கமகமன்னு நறுமணத்துடன் இருக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும் ..!

Advertisement

Easy Ways to Make Your House Smell Good in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு நாம் அனைவருக்குமே மிக மிக பயனுள்ளதாக இருக்கும். அதாவது நாம் அனைவருமே நமது வீட்டை நாமல் முடிந்த அளவிற்கு சுத்தமாக பராமரித்து வைத்து கொள்வோம். ஆனால் நாம் எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் நமது வீட்டில் ஏதாவது ஒரு சிறிய அளவிலான துறுநாற்றம் அல்லது நாற்றம் வீசி கொண்டே தான் இருக்கும். நாமும் அதனை போக்குவதற்காக பலவகையான ரூம் ஸ்ப்ரே போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அவையாவும் சில மணிநேரத்திற்கு மட்டுமே பலனை அளிக்கும் அதன் பிறகு பலன் இல்லாமல் போகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் வீட்டினை கமகமன்னு வாசனையாக வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Natural Ways to Make the House Smell Good in Tamil:

Natural Ways to Make the House Smell Good in Tamil

பொதுவாக நமது வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூம் ஸ்ப்ரே வாங்கிவந்து அதனை வீடு ரூம் என்று அனைத்து பக்கமும் அடிப்போம். அதனை சுவாசிப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் வீட்டினை கமகமன்னு வாசனையாக வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

இந்த குறிப்பினை பற்றி விரிவாக காண்பதற்கு முன்னால் முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. எலுமிச்சை காய் – 3
  2. பவுல் – 3
  3. கல் உப்பு – 6 டேபிள் ஸ்பூன்
  4. வினிகர் – 6 டீஸ்பூன் 
  5. வாசனை திரவியம் – 2 டேபிள் ஸ்பூன்
  6. கிராம்பு – 10
  7. பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன்

வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்ட வெங்காயம் மட்டும் போதும்

டிப்ஸ் செய்முறை:

How to make your home smell better naturally in tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 எலுமிச்சை காய்களை நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அதனை 1 பவுலில் 1 பழம் என்ற விகிதத்தில் 3 பவுல்களிலும் வைத்து கொள்ளுங்கள்.

பிறகு 3 பவுல்களிலும் தல 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பினை போட்டு கொள்ளுங்கள். அதேபோல் 3 பவுல்களிலும் தல 2 வினிகர் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் வாசனை திரவியத்தை ஊற்றி கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டாவது பவுலில் 10 கிராம்பினை போட்டு கொள்ளுங்கள். மற்றுமொரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் பன்னீரை ஊற்றி கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இப்பொழுது வாசனை திரவியம் ஊற்றி வைத்துள்ள பவுலை உங்கள் வீட்டின் வரவேற்பு அறையிலோ அல்லது ரூமிலோ வைத்து கொள்ளுங்கள். அடுத்து கிராம்பு போட்ட பவுலை உங்கள் வீட்டின் சமையல் அறையில் வைத்து கொள்ளுங்கள்.

இறுதியாக பன்னீர் ஊற்றி வைத்திருந்த பவுலை உங்கள் வீட்டின் பாத்ரூமில் வைத்து கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்கும்.

உங்களின் வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement