Electricity Bill Reduce Tips in Tamil!!!
கரண்ட் இல்லையென்றால் உலகமே இயங்காது. கரண்ட் இல்லாமல் இவ்வுலகில் நம்மால் வாழ முடியுமா! அந்த அளவிற்கு கரண்டானது நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. கரண்ட் பில் அதிகமாயிட்டே இருக்குனு கவலைப்படுறீங்களா! காரணம் நம் அன்றாட வாழ்வில் மின் சாதனைகளை அதிகம் பயன்படுத்துவது தான். இந்த டெக்னாலஜி உலகில் மின்சாதனங்களின் தயாரிப்பும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கரண்ட் பில் கம்மியாவதும் அதிகமாவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.
சில டிப்ஸ்களை பயன்படுத்தி கரண்ட் பில் அதிகமாவதை குறைக்கலாம் அந்த டிப்ஸ்களை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம்.
டிப்ஸ் 1:
உங்கள் வீட்டில் நார்மல் குண்டு பல்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக LED குண்டுபல்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
உதாரணமாக தினசரி நாம் 5 மணிநேரம் பல்பினை பயன்படுத்துகிறோம் என்றால் நார்மல் மஞ்சள் நிற குண்டுபல்பானது 60-லிருந்து 100 வாட்ஸ் வரை கரண்டினை குடிக்கும். ஆனால் LED குண்டுபல்புகள் 6-லிருந்து 10 வாட்ஸ் வரை தான் கரண்டினை எடுத்துக்கொள்ளும். ஒரு மாத முடிவில் நார்மல் குண்டுபல்புகள் 15 யூனிட் கரண்டினை செலவிடும். LED குண்டுபல்புகள் 1.5 யூனிட் கரண்டினை மட்டுமே செலவிடும். (நாம் பல்பினை பயன்படுத்துவதை பொறுத்து இது மாறுபடும்).
LED குண்டுபல்புகளை பயன்படுத்துவதினால் 90% வரை கரண்டினை சேமிக்கலாம்.
டிப்ஸ் 2:
உங்கள் வீட்டில் இன்னும் பழைய மாடல் டியூப்லைட்களை பயன்படுத்துகிறீர்களா? இனி அதனை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக புதிய மாடல் LED டியூப்லைட்களுக்கு மாறுங்கள்.
பழைய மாடல் டியூப்லைட்கள் 36 வாட்ஸ் கரண்டினை குடிக்கும். ஆனால் LED டியூப்லைட்கள் 18 வாட்ஸ் கரண்டினை மட்டுமே குடிக்கும். LED டியூப்லைட்டினை பயன்படுத்துவதினால் 50% கரண்ட் செலவீடு குறைக்கப்படுகிறது.
👉ஆன்லைன் மூலம் EB பில் கட்டுவது எப்படி? | How to Pay EB Bill Online in Tamil
டிப்ஸ் 3:
நாம் இரவும் பகலும் ஓய்வின்றி அதிகம் பயன்படுத்துவது ஃபேன் தான்.
சாதாரண ஃபேன் 80-லிருந்து 100 வாட்ஸ் கரண்டினை செலவிடும். ஆனால் BLDC என்ற மோட்டர் பொருத்தப்பட்ட ஃபேன்கள் 28 வாட்ஸ் கரண்டினை மட்டுமே செலவிடும். இனி ஃபேன்கள் வாங்க விரும்பினால் BLDC மோட்டர் பொருத்தப்பட்ட ஃபேன்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
டிப்ஸ் 4:
லேப்டாப், டிவி, மொபைல், கிரைண்டர், மிக்ஸி போன்ற பல பல மின்சாதனங்களை நாம் கரண்டின் மூலமாக தான் பயன்படுத்தி வருகிறோம்.
பெரும்பாலும் நாம் மின் சாதனங்களை பயன்படுத்திவிட்டு அதனை ஆஃப் செய்ய அதில் உள்ள பட்டன் முறைகளை தான் அதிகம் பயன்படுத்திக்கிறோம். பிளக் பாயின்டை ஆஃப் செய்வதே இல்லை.
உதாரணமாக டிவியினை ஆஃப் செய்ய ரிமோட்டினை பயன்படுத்துகின்றோம். பிளக் பாயின்டை ஆஃப் செய்வது இல்லை.
இவ்வாறாக நீங்கள் பிளக் பாயின்டை ஆஃப் செய்யாமல் இருப்பதால் நம் கண்ணுக்கே தெரியாம கரண்டானது வீணாயிட்டே இருக்கும்.
எனவே இனிமே கரண்டின் மூலம் பயன்படுத்துகின்ற பொருட்களை வேலை முடிந்ததும் பிளக் பாயின்டை ஆஃப் செய்ய மறந்துடாதீங்க.
டிப்ஸ் 5:
10 வருடங்களுக்கு முன் உள்ள பழைய மாடல் பிரிட்ஜ்களை பயன்படுத்தாதீங்க. அதற்கு பதிலாக தற்போது உள்ள புதிய மாடல் பிரிட்ஜ்களை பயன்படுத்துங்கள் ஏனென்றால் பழைய மாடல் பிரிட்ஜ்கள் புதிய மாடல் பிரிட்ஜ்களை விட 4 மடங்கு அதிக கரண்டினை செலவிடும்.
மேலும் பிரிட்ஜினை அடிக்கடி திறக்க கூடாது மற்றும் பிரிட்ஜ் கதவினை திறந்து வைக்ககூடாது.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரிட்ஜ் கேஸ்கட் ஒழுங்கா இயங்குகின்றதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
Tv & Fridgeக்கு இனி இதை Try பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |