எலி தொல்லையை அடியோடு விரட்ட பூண்டு மட்டும் போதும்..

Advertisement

எலி தொல்லையை அடியோடு விரட்ட 

வீட்டில் பூச்சிகளின் தொல்லை சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பூச்சிகளையும் விரட்டுவதற்கு ஒவ்வொரு மருந்து வைத்திருப்போம். அப்படி மருந்துகளை கொடுத்தாலும் அவ்வப்போது இல்லாமல் இருக்கும். சிறிது நேரம் ஆனதும் பூச்சிகளின் தொல்லை வந்து விடும். அதில் முக்கியமாக எலி தொல்லையை தாங்கவே முடியாது. வீட்டில் எலி இருந்தாலே ஒரு பொருளையும் வைக்க விடாது. துணி மற்றும் புத்தகம் போன்ற பொருட்களை அழித்து விடும். இதனை கொள்வதற்கு நீங்கள் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எலிகளை கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

எலி தொல்லை நீங்க:

புதினா எண்ணெய்:

எலி தொல்லை நீங்க

புதினாவின் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. அதனால் இந்த புதினா எண்ணெயை நீங்கள் எலி எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும். இதனை தினமும் செய்து வந்தாலே எலி தொல்லை இருக்காது. அதுமட்டுமில்லாமல் புதினா எண்ணெயை வீட்டில் ஸ்ப்ரே செய்வதால் வீடு வாசனையாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு:

எலி தொல்லை நீங்க

எலி உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வருகின்றதோ அந்த இடத்தில் உருளைக்கிழங்கினை சீவி ஒரு தட்டில் வைத்து விடவும். இதனை எலிகள் சாப்பிடும், ஆனால் சாப்பிட்ட சில நேரங்களில் எலியின் குடல் வீங்கி இறந்து விடும்.

உங்க வீட்டு கிச்சன் பக்கமே கரப்பான் பூச்சி வரக்கூடாதுனா இதை செய்யுங்க போதும்..!

பூண்டு:

எலி தொல்லை நீங்க

பூண்டு தோல்களை வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வைக்கலாம். இல்லையென்றால் பூண்டு பற்களை நச்சு கொள்ளவும். இதனை ஒரு பாட்டில் தண்ணீரில் சேர்த்து கொள்ளவும். இதனை எலி எங்கெல்லாம் வருகின்றதோ அந்த இடத்தில் எல்லாம் ஸ்ப்ரே செய்து விடவும். ஏனென்றால் பூண்டு வாசனைக்கு எலி மட்டுமில்லை எந்த பூச்சிகளும் வராது.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் வீட்டில் எலி தொல்லை இருக்காது.

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை செய்யுங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement