இது போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது ஏன் தெரியுமா..?

ennai theithu kulikkum murai

எண்ணெய் தேய்த்து குளித்தால்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்குமே அதிகளவு தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் தான். முன்பெல்லாம் அனைவருக்குமே எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆனால் இப்போது அனைவருமே ஷாம்பு போட்டு குளிப்பது வழக்கமாக செய்து வருகிறார்கள். இப்போது நல்லெண்ணெய்  தேய்த்து குளித்து வந்தாலும் அது எப்போது குளிக்கவேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். ஆனால் சில நாட்களில் ஆண் பெண் இருவரும் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

ஆண்கள் எந்த கிழமைகளில் எண்ணெய்:

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை என்பதனால் அந்த தேதியில் தான் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆனால் அது போல் செய்வது முற்றிலும் தவறு. இனி யாரும் அதை போல் செய்யாதீர்கள்.

அந்த கிழமையில் தான் சனி பகவான் நீராடும் நாள் என்பதனால் அதில் யாரும் குளிக்காதீர்கள்.

ஆண்கள் பொதுவாக புதன் மற்றும் சனி கிழமைகளில் குளிப்பது நல்லது. ஏனென்றால் அன்று சனி பகவான் எண்ணெய் தேய்த்துவிட்டு தமோ குணத்தின் அதிபதியாக இருப்பார் அதனால் அன்று குளித்தால் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.

பெண்கள் எந்த கிழமைகளில் எண்ணெய்:

அதேபோல் பெண்கள் எந்த நாட்களில் தலை குளிக்கவேண்டும் என்று என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குளிக்கலாம். பெண்களுக்கு சனியை விட சுக்கிரன் சக்தி அதிகம் தேவை என்பதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என்றால் மகா லட்சசுமிக்கு உகந்த நேரம் அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள் ஆகும்.

எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம்:

ஆண் பெண் இருவருமே எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்றால் காலை 8 மணிக்கு முன்பும் அதேபோல் மாலை 5 மணிக்கு மேலும் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. இதனை வாரம் தோறும் பின்பற்றி வரவேண்டும் அப்படி செய்வதால் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவற்றிலிருந்து தர்கார்த்துக்கொள்ளலாம்.

உடல் முழுவதும் தேய்த்து குளிப்போதான் உடலில்  உள்ள அழுக்குகள் அலர்ஜிக்கு போன்றவற்றிலிருந்து விடுபட்டு உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். முக்கியமாக உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பாக செய்யப்படவும் உதவி செய்கிறது.

உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் சர்ம பிரச்சனையிலிருந்து விடுபட்டு நல்ல மாற்றம் கிடைக்கும். உடல் சூடு குறையும்.

குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com