வீட்டில் தொல்லை செய்யும் எறும்புகளை விரட்ட பூண்டு மட்டும் போதும்..!

Erumbu Thollai Neenga Tips in Tamil

Erumbu Thollai Neenga Tips in Tamil

நாம் அனைவரின் வீட்டிற்கும் ஒரு சில உயிரினங்கள் அலைய விருந்தாளியாக வந்து நம்மை மிக மிக தொல்லை செய்வதுண்டு. அப்படிப்பட்ட உயிரினங்களில் ஒன்று தான் இந்த எறும்புகளும். இந்த எறும்புகள் நம்மை மற்ற உயிரினங்களை காட்டிலும் மிக மிக அதிகமாக தொல்லை செய்வதுண்டு. ஏனென்றால் இது நாம் வைத்துள்ள அனைத்து உணவு பண்டங்களையும் நாசம் செய்வதோடு மட்டுமில்லாமல், இவை மேலும் நம்மையும் நமது குழந்தைகளையும் கடித்து துன்புறுத்தும். எனவே இந்த எறும்புகள் வீட்டிற்குள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் வீடுகளில் தொல்லை செய்யும் எறும்புகளை விரட்ட மிகவும் எளிமையான குறிப்பினை பற்றி காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Veetil Ulla Erumbugalai Viratta Tips in Tamil:

Veetil Ulla Erumbugalai Viratta Tips in Tamil

நமது வீடுகளுக்கு வந்து நம்மையே தொல்லை செய்யும் எறும்புகளை நிரந்தரமாக விரட்ட உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

குறிப்பிற்கு பயன்படும் பொருட்கள்:

  1. சூடம் – 4
  2. பூண்டு பற்கள் – 3
  3. கிராம்பு – 6
  4. தண்ணீர் – தேவையான அளவு 
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்

டிப்ஸ் செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 பூண்டு பற்கள் மற்றும் 6 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு ஊறவிடுங்கள்.

பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் மற்றொரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 சூடத்தை நன்கு பொடியாக செய்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இப்பொழுது அதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்கள் வீட்டில் எங்கெல்லாம் எறும்பு தொல்லை அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்களின் வீட்டிற்கு எறும்புகள் நிரந்தரமாக வரவே வராது.

பல வருஷமா பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள உப்பு கரையை 10 நிமிடத்தில் நீக்க தயிர் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil