வீட்டில் எறும்புகள் வராமல் இருக்க இது ஒன்னு போதும்..

erumbu varamal iruka enna seiya vendum

எறும்பு வராமல் இருக்க 

வீட்டில் பல்லி, கரப்பான், எலி இந்த தொல்லைகள் போலவே எறும்பு தொல்லையும் இருக்கிறது. அதவாது வீட்டை அலசி விட்டால் உடல் வந்து விடும். சாதாரணமாக உணவு பொருட்கள் ஏதும் கீழே சிந்தினாலும் உடனே எறும்பு வந்துவிடும். இதனை கொள்வதற்கு கடையில் விற்கும் பூச்சி மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். மேலும் இரவு நேரத்தில் நாம் தூங்கும் போது எறும்பு காதுகுள்ளே போகிடும். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் எறும்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எறும்புகள் வராமல் இருக்க வினிகர்:

எறும்புகள் வராமல் தடுக்க

வினிகரின் வாசனையானது எறும்புகளுக்கு பிடிக்காது. அதனால் 1/2 கப் தண்ணீரில் 1/2 கப் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதனை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி தெளிப்பதால் எறும்புகள் வராது. அதே சமயம் எறும்புகள் இருந்தாலும் அவை செத்து விடும்.

மிளகுக்கீரை எண்ணெய்:

எறும்புகள் வராமல் தடுக்க

மிளகுக்கீரை எண்ணெயின் வாசனையானது பூச்சிகள். எறும்புகள் போன்றவற்றிற்கு பிடிக்காது. அதனால் இந்த எண்ணெயை நீங்கள் வீட்டின் உள்பகுதி மற்றும் ஜன்னல் போன்ற பகுதிகளில் தெளிக்க வேண்டும். இப்படி தெளிப்பதால் வீட்டில் எறும்பு மட்டுமில்ல எந்த பூச்சிகளும் வராது.

உங்க வீட்டு பாத்ரூமை ரொம்ப இல்லங்க வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் எப்படி தெரியுமா 

இலவங்கப்பட்டை:

எறும்புகள் வராமல் தடுக்க

இலவங்கப்பட்டையை அரைத்து பேஸ்ட்டாக எடுத்து கொள்ளவும். இதனை எறும்புகள் வரும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் வைத்து விட வேண்டும். இதன் மூலம் எறும்புகள் வராது.

எறும்புகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவை:

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது. சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

முதலில் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து இனிப்பு பொருட்களை மூடி ஒரு டப்பாவில் வைத்து கொள்ளவும். அது போல சாப்பிடும் உணவு பொருட்களையும் கீழே சிந்தினாலும் உடனே எடுத்து விடுங்கள்.

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil