வீட்டில் எறும்பு வராமல் தடுக்க
அனைவருக்கும் வீடு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் இந்த பூமியில் பாதுகாப்பான முறையிலும், நிம்மதியான முறையிலும் வாழ வேண்டும் என்றால் அதற்க்கு வீடு இருப்பது அவசியம். இத்தகைய நிலைமையை எல்லாம் நினைத்து நாம் வசிப்பதற்காக வீடு கட்டினால் வீட்டில் எப்போதும் நம்மை விட எறும்புகள் மற்றும் பூச்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக எறும்புகள் தான் எந்த நேரமும் இருந்துகொண்டு இருக்கிறது. சரி எறும்புகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் பொருளினை பயன்படுத்தினாலும் கூட அவற்றில் முழுமையான பலன்கள் கிடைக்கிறது என்பது சற்று அரிதாக இருக்கிறது. அதனால் இன்று வீட்டில் எறும்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான எளிமையான குறிப்பினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Use Peppermint Essential Oil to Get Rid of Ants:
மிளகுக்கீரை எண்ணெயினை பயன்படுத்தி எவ்வாறு வீட்டிற்குள் வரும் எறும்புகளை தடுப்பது என்று டிப்ஸ் வாயிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ்- 1
முதலில் 1 அல்லது 2 ஸ்பூன் அளவு மிளகுக்கீரை எண்ணெயினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த எண்ணெயினை காட்டன் பஞ்சு அல்லது காட்டன் துணியில் நனைத்து எறும்பு வரும் கதவு மற்றும் வாசல் என இதுபோன்ற இடங்களில் வைத்து விட வேண்டும்.
இந்த டிப்ஸினை செய்வதன் மூலம் மிளகுக்கீரை எண்ணெயின் வாசனைக்கு ஒரு எறும்புக்கூட உள்ளே வராது.
உங்க வீட்டு பாத்ரூமை ரொம்ப இல்லங்க வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் எப்படி தெரியுமா
டிப்ஸ்- 2
- வெள்ளை வினிகர்- 1 ஸ்பூன்
- மிளகுக்கீரை எண்ணெய்- 20 சொட்டு
- சூடு தண்ணீர்- 1 கப்
- ஸ்ப்ரே பாட்டில்- 1
முதலில் மிதமான சூட்டில் உள்ள சூடு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலில் 1/4 டம்ளர் சூடு தண்ணீர், 20 சொட்டு மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு தயார் செய்த கலவையினை வீட்டில் எறும்பு வரும் இடத்தில் லேசாக ஸ்பிரே செய்தால் போதும் எறும்பு தொல்லை இல்லாமல் இருக்கலாம்.
1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்
டிப்ஸ்- 3
உங்களுடைய வீடுகளில் நீங்கள் சாப்பாடு, தின்பண்டங்கள் என எதை சாப்பிட்டாலும் போதுமான அளவு கீழே சிந்துவதை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இதுமாதிரி சாப்பாடு சிந்துவதன் மூலன் எறும்புகள் வீட்டிற்குள் அதிகமாக வரும்.
அதேபோல் மிளகுக்கீரை எண்ணெயினை எறும்பு விரட்டியாக நீங்கள் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |