Full Body Whitening at Home Naturally in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டால் நமது முகம் மட்டுமில்லாமல் நமது உடல் முழுவதுமே பொலிவிழந்து காணப்படுகிறது. அப்படி பொலிவிழந்து காணப்படும் முகம் மற்றும் உடலை பொலிவு பெற செய்வதற்கு நீங்களும் பல முயற்சிகள் செய்திருப்பீர்கள். ஆனால் அவையாவும் கொடுக்காத பலனை இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்கு அளிப்பதை நீங்களே காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Body Whitening Home Remedies in Tamil:
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது முகம் மட்டுமில்லாமல் நமது உடல் முழுவதும் நன்கு பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.
அதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் செய்து உங்களின் முகம் மற்றும் உடல் முழுவதும் பொலிவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
டிப்ஸ் – 1
இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- ஆரஞ்சு தோல் – 1/4 கிலோ
- வேப்பிலை – 1/4 கிலோ
- அதிமதுரம் – 1/4 கிலோ
முதலில் மேலே கூறியுள்ள 1/4 கிலோ ஆரஞ்சு தோல், 1/4 கிலோ வேப்பிலை, மற்றும் 1/4 கிலோ அதிமதுரம் ஆகியவற்றை நன்கு உலர வைத்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றையெல்லாம் நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
இந்த பொடியில் தினமும் குளிப்பதற்கு முன்னால் 2-3 டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து உடல் முழுவதும் தடவி 1/2 மணிநேரம் வைத்து, பின்னர் குளித்து வருவதன் மூலம் உங்களின் உடல் முழுவதும் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
உடல் முழுவதும் அழகு பெற வைட்டமின் சி சோப்
டிப்ஸ் – 2
இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- பால் – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
- சர்க்கரை – 4 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடலைமாவு – 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 கப் தண்ணீர்,1 கப் பால் மற்றும் 4 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இவையெல்லாம் கொதித்து பாதியளவிற்கு வந்ததும் அதனை எடுத்து நன்கு சூடு ஆறிய பிறகு அதில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் கடலைமாவு மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை உடல் முழுவதும் தடவி 1/2 மணிநேரம் வைத்து, பின்னர் குளித்து வருவதன் மூலம் உங்களின் உடல் முழுவதும் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |