Face Pimples Remove Tips
சுற்றுசூழல் காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. சருமத்தில் இல்ல பாக்ட்ரியா மற்றும் இறந்த செல்கள் காரணமாக பருக்கள் ஏற்படுகிறது. பருக்கள் நாளடைவில் கருப்புள்ளிகளாக மாறிவிடும். மரபணு மாற்றம், பொடுகு பிரச்சனை, மன அழுத்தம், தூக்கமின்மை, பால் சார்ந்த உணவு பொருட்கள் அதிகமாக சாப்பிடுவது போன்ற காரணங்களால் பருக்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு முதலில் சத்தான உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனை செய்து விட்டு முகத்தில் சில பேஸ் பேக் அப்ளை செய்வதன் மூலம் முகப்பருவை சரி செய்யலாம். அது என்ன பேஸ் பேக் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
பூண்டு மற்றும் கற்றாழை:
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதுவுகிறது. பூண்டில் அல்லிசின் பாக்ட்ரியாவை எதிர்த்து போராடும் திறன் கொண்டது.
பூண்டை தோல் உரித்து, அதனை பேஸ்ட்டாக எடுத்து கொள்ளவும். இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம். இந்த பேக்கை பருக்கள் குறையும் வரை தினமும் பயன்படுத்தவும்.
வாழைப்பழம்:
வாழைப்பழ தோல்களில் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
ஒரு வாழைப்பழ தோலை மட்டும் எடுத்து கொள்ளவும். தோலின் உள்பகுதியை பயன்படுத்தி முகத்தில் 10 நிமிடம் வரைக்கும் தேய்க்கவும். இந்த குறிப்பை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு செய்ய வேண்டும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை அலர்ஜி எதிர்த்து போராடுகிறது. தேன் முகத்தில் உள்ள பாக்ட்ரியாவை எதிர்த்து போராடுகிறது. இந்த இரண்டு பொருட்களும் சேரும் போது முகத்தில் உள்ள பருக்களை நீக்குகிறது.
ஒரு இலவங்கப்பட்டையை எடுத்து பொடியாக அரைத்து கொள்ளவும். 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி, 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி கொள்ளவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகரில் சிட்ரிக், லாக்டிக், அசிட்டிக் போன்ற அமிலங்கள் உள்ளது. இந்த அமிலங்கள் முகப்பருவை உண்டாக்கும் பாக்ட்ரியாக்களை அழித்து போராட உதவுகிறது.
2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |