பாத்ரூமை இதை விட யாரும் ஈஸியா கிளீன் செய்ய முடியாது..

Advertisement

Fast Bathroom Cleaning Tips in Tamil

ஒவ்வொருவரும் வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். இதனால் வாரத்தில் ஒரு நாள் அல்லது விடுமுறை நாட்களில் தான் வீட்டை சுத்தப்படுத்துகின்றனர். வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தாலும் அவ்வளவுக்கு தூசிகள் இருக்காது, ஆனால் பாத்ரூம் சுத்தமாக இல்லையென்றால் வீடே நாறிவிடும். அதனால் எளிமையான முறையிலும் ஈஸியான முறையிலும் பாத்ரூமை கிளீன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

எளிமையான முறையில் பாத்ரூம் கிளீன் செய்வது எப்படி.?

பாத்ரூமை கிளீன் செய்வதற்கும், நறுமணமாக இருப்பதற்கு அதிக விலையில் காசு கொடுத்து Liquid-களை வாங்கி வைத்து பயன்படுத்துவீர்கள். இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பாத்ரூமை கிளீன் செய்யலாம். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பாத்ரூம் கிளீன் செய்ய கஷ்டமா இருக்கிறதா.! அப்போ இதை ஒரு ட்ரை பண்ணி பாருங்க..

எளிமையான முறையில் பாத்ரூம் கிளீன் செய்வது எப்படி

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை பாத்ரூமில் அழுக்கு உள்ள பகுதியில் தெளித்து விட்டு ஒரு முறை தேய்த்து விடவும், இவை அப்படியே 1/2 மணி நேரம் ஊறட்டும். 1/2 மணி நேரம் கழித்து பாத்ரூமை வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு கழுவி விடவும்.

எளிமையான முறையில் பாத்ரூம் கிளீன் செய்வது எப்படி

பாத்ரூமில் துர்நாற்றம் வருகிறது என்றால் ஒரு கப்பில் பேக்கிங் சோடா சிறிதளவு, வினிகர் சிறிதளவு, எலுமிச்சை சாறு  சிறிதளவு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாத்ரூம் முழுவதும் தெளித்து விட்டு 15 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பிறகு வார்கோலை பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். இது போல் வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் பாத்ரூம் பளிச்சென்று இருக்கும்.

உப்புகறை படிந்த பாத்ரூம் & கிச்சனை 5 நிமிடத்தில் கிளீன் செய்திடலாம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement