பில்டர் காபி போடுவது எப்படி.?
பில்டர் காபி யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா..! பெரும்பாலானவர்கள் வெளியில் சென்றாலே காபி தான் குடிப்பார்கள். அதிலும் பில்டர் காபி தான் மிகவும் இஷ்டம். இந்த மாதிரி பில்டர் காபி வீட்டிலும் போடலாம். அதற்கு பில்டர் இருக்க வேண்டும் நினைப்பீர்கள். சில நபர்கள் வீட்டில் தான் பில்டர் இருக்கும். சில நபர்கள் வீட்டில் பில்டர் இருக்காது. பில்டர் இல்லாமல் பில்டர் காபி எப்படி போடுவது என்று சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான டல்கோனா காபி செய்முறை
பில்டர் காபி செய்வது எப்படி.?
ஸ்டேப்:1
முதலில் பில்டர் காபி போடுவதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் 5 தேக்கரண்டி காபி தூள், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:2
பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும். இந்த கொதித்த தண்ணீரை கலந்து வைத்திருக்கின்ற காபித்தூளில் சேர்க்கவும். பின் ஒரு கரண்டி வைத்து கலந்து விடுங்கள்.
ஸ்டேப்:3
பின் அந்த பாத்திரத்தின் மேல் ஒரு தட்டு வைத்து மூடிவிடுங்கள். அந்த தண்ணீர் ஆறிய பிறகு அந்த பாத்திரத்தை அசைக்காமல் வடிகட்டி வைத்து வடிக்கட்ட வேண்டும். இப்போது பில்டர் ரெடி..!
ஸ்டேப்:4
பிறகு தண்ணீர் சேர்க்காமல் பாலை காய்த்து கொள்ளவும். காய்த்த பாலில் செய்து வைத்துள்ள பில்டர் கஷாயத்தை ஊற்ற வேண்டும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க கடையில் போடும் பில்டர் காபி தயார்.
காபி தூள் நீடித்து வர:
காபி தூள் வாங்கிய சிறிது நாட்களிலே கட்டி ஆகி விடும். அதற்கு ஒரு ஈஸியான ஐடியாவை தெரிந்துகொள்வோம்.
காபி தூளை பிளாஸ்டிக் பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. கண்ணாடி பாட்டிலில் தான் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். இது போல் செய்வதினால் காபி தூள் கட்டி ஆகாமல், வாசமாகவும் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |