Fridge Always Fragrance Tips in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் காணப்போகும் பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக இன்றைய நிலையில் பெண்கள் பணிபுரியாத துறைகளே கிடையாது. அனைத்து இடங்களிலும் பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அப்படி வேலை செய்யும் பெண்களுக்கு அதிக வேலை இருக்கும் இடம் என்றால் அது வீடு தான். வேலைக்கு செல்லும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் வேலைகள் அதிகமாக இருக்கும்.
காலையில் இருந்து தூங்க செல்லும் வரை பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமைப்பது என்று வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்கும் விதமாக பல டிப்ஸை இந்த பதிவில் தினமும் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பிரிட்ஜை எப்பொழுதும் நறுமணமாக வைத்து கொள்ளும் டிப்ஸை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பிரிட்ஜ் எப்போதும் நறுமணமாக இருக்க டிப்ஸ்..!
பெரும்பாலும் நாம் என்ன தான் பிரிட்ஜை தினமும் சுத்தம் செய்தாலும் அதில் இருந்து கெட்ட வாசனை வந்து கொண்டு தான் இருக்கும். அதேபோல் அந்த நாற்றம் பிரிட்ஜில் இருக்கும் பொருட்களிலும் வீச ஆரம்பித்துவிடும்.
இதற்கு என்ன தான் செய்வது என்று சொல்லி புலம்புவரா நீங்கள். அதற்கு தான் ஒரு அருமையான டிப்ஸ் கொண்டு வந்துள்ளேன். அது என்ன டிப்ஸ் என்று இங்கு காணலாம்.
இனிமேல் இந்த பொருட்களை மறந்தும் பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள்.. மீறி வைத்தால் அவ்வளவு தான் |
- எலுமிச்சை பழம் – 1
- காபித்தூள் – 3 ஸ்பூன்
முதலில் ஒரு கிண்ணத்தில் 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு காபி தூள் எடுத்து கொள்ளவும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அதை 5 நிமிடம் வரை காயவிட்டு பின் அதை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
அவ்வளவு தான், இப்பொழுது நாம் சேர்த்த இரண்டு பொருட்களிலும் கெட்ட வாசனையை நீக்கும் பண்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எலுமிச்சை பழம் பிரிட்ஜில் இருக்கும் கெட்ட வாடையை உறிஞ்சி கொள்கிறது. அதனால் இந்த டிப்ஸை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். இனி உங்கள் வீட்டு பிரிட்ஜை திறந்தாலே வாசம் மட்டும் தான் வரும்..!
பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா.. அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |