பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்கி, கமகமவென வாசம் வர சூப்பரான டிப்ஸ்..!

Advertisement

Fridge Cleaning Home Tips in Tamil

ஹலோ மக்களே..! பொதுவாக இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வேலைக்கு செல்கிறார்கள். என்ன தான் பெண்கள் பல துறைகளில் வேலை செய்தாலும், அதை விட வீட்டு வேலை தான் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை இல்லத்தரசிகளுக்கு வேலை இருந்து கொண்டு தான் உள்ளது. அதனால் தான் நம் பதிவில் அவர்களின் வேலையை சுலபமாக முடிப்பதற்கான பல டிப்ஸை ஒவ்வொரு நாளும் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் வாயிலாக பிரிட்ஜில் ஆங்காங்கே படிந்துள்ள கறைகளை எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்குவது எப்படி..? 

பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்குவது

பொதுவாக இன்றைய நிலையில் அனைவரின் வீடுகளிலும் பிரிட்ஜ் இருக்கிறது. அப்படி இருக்கையில் பிரிட்ஜில் இருக்கும் கறைகளை சுத்தம் செய்வதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். அதுபோல பிரிட்ஜை திறந்தாலே ஏதோ நாற்றம் வருகிறது என்று சொல்லி புலம்புபவர் தான் இங்கு அதிகம்.

அதனால் இந்த பிரச்சனை அனைத்தையும் சரி செய்யும் Liquid -யை வீட்டிலேயே செய்து பிரிட்ஜை சுத்தம் செய்யலாம் வாங்க.

வாரத்தில் ஒரு நாள் 2 மணி நேரம் செலவிட்டால் வீடு புதிதாகவே இருக்கும்

Step -1 

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

Step -2 

பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்குவது

பின் அதில் ஏதாவது ஒரு Dish Wash Liquid -யை ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு அதில் பேக்கிங் சோடா 1 டேபிள்ஸ்பூன் அளவிற்கு போட்டு கொள்ள வேண்டும்.

10 வருட பாத்ரூமும் பளபளப்பாக மாற இதை மட்டும் 10 நிமிடம் செய்தால் போதும்

Step -3

பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்குவது 

அடுத்து அதில் 1 எலுமிச்சை பழத்தின் சாறை நன்றாக பிழிந்து சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தான் இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

Step -4 

பிரிட்ஜில் படிந்துள்ள கறைகளை நீக்குவது

இப்போது இந்த Liquid -ஐ ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பிரிட்ஜில் ஆங்காங்கே காணப்படும் இடங்களிலும், அதன் ஓரங்களிலும் ஸ்ப்ரே செய்ய வேண்டும். பின் ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

அவ்வளவு தான் இப்படி செய்தால் பிரிட்ஜியின் இண்டு இடுக்குகளில் படிந்துள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும். பிரிட்ஜை திறந்தாலே வாசம் மட்டும் தான் வரும்.

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement