பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Advertisement

பிரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? | Fridge Freezer Cleaning Tips in Tamil

ஹாய் நண்பர்களே.. பொதுவாக பலரது வீட்டில் இப்பொழுது பிரிட்ஜ் பயன்படுத்துகிறோம். இருப்பினும் சிலர் மட்டும் தான் பிரிட்ஜை சரியான முறையில் பராமரிப்பார்கள் அதனால் அவர்களது பிரிட்ஜ் பார்ப்பதற்கு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். மற்றவர்கள் வீட்டில் பிரிட்ஜை திறந்து பார்த்தால்.. ஏன்தான் திறந்து பார்த்தோம் என்று தோன்றிவிடும். சரி விடுங்க உங்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கானது தான்.. ஆம் பிரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி? என்பதை பற்றியும் பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ் கட்டிகளை எப்படி எளிமையாக அகற்றுவது என்பதை பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 இனி இந்த மாதிரி வாஷ் பேஷனை கிளீன் பண்ணுங்க..!

பிரிட்ஜ் சுத்தம் செய்வது எப்படி?

fridge cleaning tips

உங்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜில் விடாப்பிடியான கறைகள் படிந்திருந்தால், இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

முதலில் பிரிட்ஜியை Off செய்துவிட்டு ஒயரை சுவீட் பாக்சில் இருந்து கழற்றிவிடுங்கள்.

பின் ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் நீங்கள் பயன்படுத்தும் துணி பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

பின் ஸ்பாஞ் பயன்படுத்தி பிரிட்ஜியை சுத்தம் செய்யலாம் விடாப்பிடியான கறைகள் உள்ள இடத்தில் இந்த கலவையை பயன்படுத்தி தேய்த்துவிடுங்கள். பின் 5 நிமிடம் கழித்து சுத்தமாக பிரிட்ஜை துடைத்து எடுத்தீர்கள் என்றால் பிரிட்ஜில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

வேணுமென்றால் வாசனைக்காக சிறிதளவு எலுமிச்சை பழம் சாறினை இந்த கலவையுடன் கலந்துகொள்ளலாம்.

ஃபிரீசரில் உள்ள ஐஸ் கட்டிகளை அகற்றுவது எப்படி?

பொதுவாக பலரது வீட்டில் இந்த பிரச்சனை இருந்து வருகிறது, அதாவது பிரீசரில் உள்ள ஐஸ் கட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்துகொண்டிருந்தாலும். மீண்டும் மீண்டும் ஐஸ் கட்டிகள் படிந்துகொண்டே இருக்கும். இதனால் பிரிட்ஜை சரியாக லாக் செய்யவும் முடியாது. இதனால் பிரிட்ஜில் உள்ள அனைத்து பொருட்களுமே பிரீசர் ஆகிவிடும். இந்த பிரச்சனையை ஓரளவு தவிர்க்க இந்த டிப்ஸை ட்ரை செய்துபாருங்கள்.

👉👉- பாத்திரம் கழுவும் கம்பி நார் நீண்ட நாள் உழைக்க – இதை try பண்ணுங்க..

டிப்ஸ்: 1

அதாவது ஒரு சிறிய காட்டன் துணியில் சிறிதளவு தூள் உப்பை வைத்து மடித்துக்கொள்ளுங்கள். பின் அந்த காட்டன் துணியில் இருக்கக்கூடிய கல் உப்பை அப்படியே ஃப்ரீசரின் உள்பக்கத்தில் எல்லா இடங்களிலும் லேசாக படும்படி தடவி விட்டு விட வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் சால்ட் உப்பை போட்டு அதை ஃப்ரீசருக்குள் வைத்து விடுங்கள். இப்படி செய்தால் ஐஸ் கட்டியானது சீக்கிரம் கட்டாது. முயற்சி செய்து பாருங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை இப்படி உப்பை ஃப்ரீசருக்கு உள்ளே தடவி வைத்தால் நிறைய ஐஸ் கட்டிகள் பனிமலை போல கட்டாமல் இருக்கும்.

டிப்ஸ்: 2

பிரீசர்க்குள் அதிகளவு ஐஸ் கட்டிகள் கட்டிக்கொண்டாள், அதனை எளிமையாக அகற்ற ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அந்த ஐஸ் கட்டிகள் மீது மெதுவாக ஊற்றிவிட்டு வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த ஐஸ் கட்டிகள் மிக சீக்கிரமாக உருகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!

குறிப்பு:

அதிகப்படியான ஐஸ் கட்டிகள் பிரிட்ஜில் கட்டிக்கொண்டாள்.. பிரீசர் வலது பக்கத்தில் உள்ள பட்டனை கொஞ்சம் நேரம் Off பண்ணிவையுங்கள்.

அதே மாதிரி குளிர், மழை காலத்திற்கு கூலிங் லெவலை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள்.

அதே மாதிரி நார்மலாக ஐஸ் கட்டிகள் கட்டிக்கொண்டே இருக்கிறது என்றால் கூலிங் லெவலை குறைத்தே வைத்து பயன்படுத்துக்கள். இதன் மூலம் ஐஸ் கட்டிகள் கட்டுவதை தவிர்க்க முடியும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement