குளிப்பதற்கு முன் இதை தடவி குளித்து பாருங்கள்..! மிருதுவான சருமம் கிடைக்கும்

Advertisement

உடல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

ஹாய் இனிய தோழன் தோழிகளே இன்று அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு பதிவுடன் வந்திருக்கிறேன். இன்று யாருக்கும் போர் அடிக்காமல் இருக்கும் விதத்தில் இந்த பதிவு இருக்கும். எப்போதும் இதை செய்தால் நாம் அழகாகி விடுவேனா அதை செய்தால் அழகாகி விடுவேனா என்று மாறி மாறி யோசித்துக்கொண்டே இருப்போம். அதில் நிறைய பேர் சிலவற்றை செய்து பார்த்திருப்பார்கள். சிலர் செயற்கையான முறையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் இயற்கையாக இருக்கும் பொருட்களை நாமே தயாரித்து உடலில் பூசி வர உடலுக்கும் சரி உடலில் உள்ள தோள்களுக்கு சரி எந்த பிரச்சனையும் ஏற்படாது அந்த வகையில் இன்று நாம் தினம்தோறும் குளிக்கும் போது உடல் தோள்கள் மிருதுவாகவும் வெண்மையாகவும் இருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க அதனை இப்போது காண்போம்..!

Full Body Whitening Tips in Tamil:

தேவையான பொருட்கள்:

காஃபி தூள் – 1 ஸ்பூன்,

கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன்,

கடலை மாவு – 2 ஸ்பூன்,

முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்

டிப்ஸ் -1

முதலில் ஒரு கிண்ணத்தில் காப்பி தூள் – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன், முல்தானி மெட்டி – 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

இதனை பேஸ்ட் போல் மாற்ற ஏதாவது ஒரு தண்ணீரை சேர்க்கவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால், தயிர், ரோஸ் வாட்டர், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ் போன்ற ஏதாவது ஒன்றினை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

உங்களுடைய முகத்திற்கு எது பாதிப்பை விளைவிக்காமல் இருக்கிறதோ அதனை முகத்திற்கு சேர்த்துக்கொள்வது நல்லது.

டிப்ஸ் -2

கழுத்தில் கருமை வர காரணம்

இந்த பேஸ்பேக்கை கருப்பாக இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மிருதுவாக இருக்கும். அதுபோல் இதனை முக்கியமாக கழுத்து பகுதியில் தடவி குளித்து வந்தால் வெண்மையாகும். இதனை வாரத்தில் 7 நாட்கள் செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

கை கால் வெள்ளையாக:

கை கால் வெள்ளையாக

முக்கியமாக சிலருக்கு கை கால்களில் கருமை நிறைமாக இருக்கும். காரணம் அவர்கள் அதிகம் வெயிலில் நடப்பதால் சூரியனுடைய கதிர்விச்சு பட்டு கருமையாக இருக்கும். அதனை மறைய வைக்க அந்த பேஸ்பேக்கை கருமை உள்ள இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தடவி கை கால்களில் மசாஜ் செய்து குளித்தால் மிருதுவாக இருக்கும். இதை பயன்படுத்தும்போது சோப்பு போட்டு குளிக்க வேண்டாம்.

இந்த பதிவை படித்துவிட்டு தினமும் இதனை செய்து வந்தால் உடல் வெண்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

குறிப்பு ⇒ இதனை ஆண்களும் செய்யலாம் ஆனால் அதில் மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களை சேர்த்து குளிக்கலாம். 

  இதையும் படிங்க  ⇒ குப்பையில் வீசி எரியும்பொருட்கள் சருமத்திற்கு நல்லது

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement