பூண்டு தோல் உரிப்பது எப்படி?
ஹேய் நண்பர்களே..! தினமும் பெண்கள் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கிறார்கள். சமைப்பதற்கு கூட யாரும் கஷ்ட படமாட்டார்கள். ஆனால் பூண்டு தோல் உரிப்பது, வெங்காயம் உரிப்பது, தேங்காய் திருவுவது தான் கஷ்டம். சமைக்கும் போது யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். இனி இது மாதிரி கஷ்ட படவேண்டாம். கத்தி, அருவாள் மனை இல்லாமல் 1 நிமிடத்தில் 1 கிலோ பூண்டை உரிப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து பயன்பெறலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ தேங்காய் திருக கஷ்டமாக இருக்கா..! இனிமேல் இந்த மாதிரி செய்யுங்கள்..!
How to Peel Garlic Easily at Home in Tamil:
ஸ்டேப்-1
முதலில் முழு பூண்டாக இருப்பதை தனி தனி பூண்டு பல்லாக உடைத்துக்கொள்ள வேண்டும். பூண்டு பல்லை நன்றாக உடைத்த பிறகு ஒரு முறத்தில் கொட்டி லேசாக தோல் போகும் வரை புடைக்க வேண்டும். பூண்டில் உள்ள தோல் நீங்கியவுடன் தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்-2
அதன் பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு அகலமான பாத்திரத்தில் தனியாக எடுத்துவைத்துள்ள பூண்டு பல்லை கொட்டி சூடு செய்யுங்கள். 30-லிருந்து 50 நிமிடம் வரை மிதமான சூட்டில் பூண்டு இருக்க வேண்டும். இதற்கு இடையில் கரண்டி வைத்து பூண்டை கலந்து விடுங்கள்.
ஸ்டேப்-3
பூண்டின் தோல் மட்டும் சூடாகினால் போதும். அந்த பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவேண்டும். மிதமான சூட்டில் பூண்டு இருக்கும்போது பூண்டில் உள்ள ஈரப்பதம் நீங்கி விடும்.
ஸ்டேப்-4
அதன் பிறகு ஒரு காட்டான் துணி அல்லது துப்பட்டா எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பூண்டை கொட்டி ஒரு முடிச்சு போட்டுவிடுங்கள். அந்த முடிச்சு அவிழ்ந்து பூண்டு வெளியே விழுகாத அளவிற்க்கு இருக்கவேண்டும். இப்போது இந்த முடிச்சை துணி துவைப்பது போல் 10 முறை அடிக்கவேண்டும்.
ஸ்டேப்-5
பூண்டை தரையில் நன்றாக அடித்துமுடித்த பிறகு அந்த முடிச்சினை அவிழ்த்து பார்க்கும்போது பூண்டில் தோல் நீங்கி இருக்கும். அதன் பிறகு முறத்தில் கொட்டி புடைத்தால் தோல் நீக்கிய பூண்டு கிடைத்துவிடும். அவ்வளவு தான் சுலபமே இல்லாமல் தோல் நீக்கிய பூண்டு ரெடி ஆகிவிடும்.
பூண்டு தோல் உரிப்பதற்கான டிப்ஸ்:
டிப்ஸ் -1
வீட்ல மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் இதை செய்து பாருங்க. முழு பூண்டை மைக்ரோவேவ் ஓவனில் 30 நொடி வைத்து எடுத்தால் போதும், பூண்டு தோல் ஈசியாக வந்துவிடும்.
டிப்ஸ் -2
மைக்ரோவேவ் இல்லாதவர்கள், பூண்டுகளை வாணலியில் போட்டு சில நொடிகள் விட்டு எடுத்தால் பூண்டு தோள் ஈசியாக வந்து விடும்.
டிப்ஸ் -3
பூண்டு பற்களை ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து வேகமாக குலுக்கினால் பூண்டு தனியே, தோல் தனியே வந்துவிடும்.
டிப்ஸ் -4
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூண்டுகளை போட்டு வைத்து, ஒரு மணிநேரம் கழித்து எடுத்து, தரையில் லேசாக தட்டினால் பூண்டு தோலினை ஈசியாக நீக்கி விடலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |