Gas Burner Cleaning at Home in Tamil
இன்றைய கால தலைமுறையினர் பலரும் விறகு அடுப்பில் சமைப்பதற்கு பதிலாக பெரும்பாலும் கேஸ் அடுப்பில் சமைப்பதை தான் விரும்பகிறார்கள். அப்படி பார்க்கையில் விறகு அடுப்பில் அமைக்கும் போது நமக்கு அதிகப்படியான வியர்வை ஆனது ஏற்படும். ஆனால் இவற்றில் சமைப்பதினால் நமக்கு எந்த விதமான அலைச்சலோ அல்லது உடலில் ஏதேனும் வியர்வையோ இருக்காது. இவ்வாறு இருக்கையில் விறகு அடுப்பினை நாம் அவ்வளவாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் கேஸ் அடுப்பானது அவ்வாறு கிடையாது. ஏனென்றால் வாரம் 1 முறையாவது இதனை சுத்தம் செய்தால் மட்டுமே பளிச்சென்று இருக்கும். அப்படி இல்லை என்றால் பழையது போல மாறிவிடும். அதுவும் குறிப்பாக கேஸ் பர்னரை சுத்தம் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயலாகவே இருக்கும். அதனால் இன்று வெறும் 5 நிமிடத்தில் எப்படி கேஸ் பர்னரை சுத்தம் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேஸ் பர்னர் சுத்தம் செய்ய டிப்ஸ்:
கேஸ் பர்னரை சுத்தம் செய்ய முதலில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
- வினிகர்- 3 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
முதலில் உங்களுடைய கேஸ் அடுப்பில் கேஸ் பர்னரை எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சில்வர் பாத்திரத்தில் சூடு தண்ணீரை எடுத்து கொள்ளவும்.
இப்போது அந்த தண்ணீரில் 3 ஸ்பூன் அளவிற்கு வினிகரை சேர்த்து விடுங்கள். இதனை தொடர்ந்து வினிகர் கலந்த அந்த தண்ணீரில் கேஸ் பர்னரை போட்டு 1 மணி நேரம் வரை ஊறவைத்து விடுங்கள்.
அடுத்த ஒரு பவுலில் 1 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு 1 மணி நேரம் கழித்த ஊறவைத்துள்ள கேஸ் பர்னரை வெளியே எடுத்து அதில் இருக்கும் கரையின் மீது பேக்கிங் சோடாவை பிரஸினால் தொட்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
இவ்வாறு நன்றாக தேய்த்து முடித்த கேஸ் பர்னரை தண்ணீரில் நன்றாக கழுவி காய விடுங்கள். அவ்வளவு தான் எப்பேர்ப்பட்ட பழைய கேஸ் பர்னரையும் புதியது போல பளபளக்க செய்யலாம்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |