வெறும் 3 பொருள் போதும்..! கருத்த கேஸ் பர்னர் வெண்மையாக மாற..!

Advertisement

3 பொருளின் அதிசயம் 

வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் காணப்போகும் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் இங்கு கடினமாக உழைக்கிறார்கள். எப்படி சொல்கிறேன் என்றால், ஆண்கள் வெளியில் ஒரு வேலைக்கு தான் செல்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு, வெளியிலும் வேலைக்கு செல்கிறார்கள். அதிலும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை வீட்டில் வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களின் வேலையை சுலபமாக முடிக்கும் விதமாக நிறைய டிப்ஸை சொல்லிக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று கருத்துப்போன கேஸ் பர்னரை வெறும் 3 பொருட்களை வைத்து வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேஸ் பர்னரை வெண்மையாக மாற்ற 3 பொருள் போதும்..! 

பொதுவாக நம் வீட்டில் அடிக்கடி அழுக்கு படியும் பொருள் என்றால் அது கேஸ் பர்னர் தான். எப்படி என்றால் நாம் சமைக்கும் போது பால், சாதம் என்று பொங்கி ஊற்றி அடுப்பையே அழுக்காகிவிடும்.

அப்படி இருக்கும் போது கேஸ் பர்னரில் நீர் தேங்கி துருப்பிடித்து கருப்பாக மாறிவிடுகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று சொல்லி புலம்புபவர்களுக்கு தான் இந்த பதிவு. சரி வாங்க அந்த Simple டிப்ஸை தெரிந்து கொள்ளலாம்.

இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க

டிப்ஸ் -1

கேஸ் பர்னரை வெண்மையாக மாற்ற 3 பொருள் போதும்

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 டம்ளர் அளவிற்கு Coca-Cola எடுத்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் எப்போதாவது Bovonto வாங்கி குடித்தால் அதில் 1 டம்ளர் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் -2

கேஸ் பர்னரை வெண்மையாக மாற்ற 3 பொருள் போதும்

பின் அதில் ஏதாவது ஒரு Dish Wash Liquid -யை 1/2 டம்ளர் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் -3

கேஸ் பர்னரை வெண்மையாக மாற்ற 3 பொருள் போதும்

கடைசியாக தண்ணீர் 1 டம்ளர் அளவிற்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்போது கேஸ் பர்னரை இந்த நீரில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு எடுத்து கழுவி பாருங்கள். கறைகள் அப்படியே வந்துவிடும். கேஸ் பர்னர் புத்தம் புதிது போல மாறிவிடும்.

5 நிமிடத்தில் கேஸ் பர்னரை புதியது போல மாற்ற 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மட்டும் போதும் 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement