1 டம்ளர் காட் வாட்டர் போதும் கருத்த கேஸ் பர்னர் பளிச்சென்று மாற..!

Advertisement

Gas Burner Cleaning Simple Tips in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..!  இப்போ இருக்கின்ற காலகட்டத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்து துறைகளிலும் வேலை பார்க்கிறார்கள். என்னதான் பெண்கள் வெளியில் தைரியமாக வேலைப் பார்த்தாலும் வீட்டு வேலை என்றாலும் கொஞ்சம் பயப்படுவார்கள். காரணம் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை வீட்டில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமைப்பது என்று வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் அவர்களின் வேலைகளை சுலபமாக மாற்ற சில டிப்ஸ் பற்றி கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கருத்துப்போன கேஸ் பர்னரை சில நொடிகளில் பளபளப்பாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருத்துப்போன கேஸ் பர்னரை பளிச்சென்று மாற்ற டிப்ஸ்:

பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் விரைவாக கருத்துபோகும் பொருள் என்றால் அது கேஸ் பர்னர் தான். அதுவும் கருத்த கேஸ் பர்னரை பளிச்சென்று மாற்ற பலரும் என்னென்னமோ செய்கிறார்கள். ஆனாலும் பளபளப்பாக மாறவில்லை என்று சொல்லி புலம்புகிறார்கள். அதனால் தான் சுடு தண்ணீரை வைத்து கேஸ் பர்னரை எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்க போகிறோம்.

ஸ்டேப் – 1 

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் கேஸ் பர்னரை வைத்து விடுங்கள். பின் அதில் Harpic அல்லது Dish Wash லிக்விடை ஊற்றி கொள்ளுங்கள்.

இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க 

ஸ்டேப் – 2  

கருத்துப்போன கேஸ் பர்னரை பளிச்சென்று மாற

பின் அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை ஊற்றி கொள்ளுங்கள். இறுதியாக பேக்கிங் சோடா 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப் – 3 

கருத்துப்போன கேஸ் பர்னரை பளிச்சென்று மாற

 

பின் கடைசியாக 1 டம்ளர் சுடு தண்ணீரை அதில் ஊற்றி 5 நிமிடம் வரை ஊறவிடுங்கள். பின் அதை எடுத்து ஸ்க்ரப்பரை வைத்து தேய்த்தால் அதில் இருக்கும் கருமை அப்படியே வந்துவிடும்.

ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். கருத்துப்போன கேஸ் பர்னர் பளிச்சென்று மாறுவதை நீங்களே காண்பீர்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement