கேஸ் பர்னர் கருத்து போயிருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Advertisement

கேஸ் பர்னர் சுத்தம் செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! கேஸ் அடுப்பு வெளியில் மட்டும் துடைத்து அழகாக வைத்திருப்பீர்கள். ஆனால் உள்பகுதியான கேஸ் பர்னர் கருப்பாகவே இருக்கும். இப்படி கருப்பு கறை அதிகமாகும் போது அடுப்பில் அடைப்பு ஏற்பட்டு மெதுவாக எரியும். சமையலுக்கு முக்கியமானது அடுப்பு அதை எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  கேஸ் பர்னரில் கருப்பு கறை படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். கேஸ் பர்னர் புதிது போலவே இருக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க.

கேஸ் பர்னர் சுத்தமாக:

முதலில் கேஸ் பர்னர் மூழ்கின்ற அளவிற்கு ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்கள். அதில் நல்லா கொதிக்கின்ற வெந்நீரை ஊற்றி கொள்ளுங்கள். பின் அதில் கேஸ் பர்னர் இரண்டையும் சேர்த்து கொள்ளுங்கள். அதில் எலும்பிச்சை பழச்சாறு மற்றும்  துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் 3 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். கேஸ் பர்னர் தண்ணீரில் அப்படியே இரவு முழுவதும் ஊறட்டும். 

இதையும் படியுங்கள் ⇒ கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க இத பண்ணாலே போதும்!

மறுநாள் காலையில் கேஸ் பர்னரை எடுத்து பாருங்கள் அதில் உள்ள கருப்பு கரையெல்லாம் நீங்கியிருக்கும். இன்னும் பளிச்சென்று ஆகுவதற்கு அதில் கொஞ்சம் வினிகர் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற விடுங்கள்.

1 மணி நேரம் கழித்ததும் கேஸ் பர்னரை வெளியில் எடுத்து கம்பி நாரை கொண்டு நன்றாக தேயுங்கள். அதன் பின்பு சிறிதளவு புளி எடுத்து தேய்த்து கொள்ளுங்கள். பிறகு நன்றாக கழுவி கொள்ளுங்கள்.

கேஸ் பர்னர் அடைப்பை நீக்குவதற்கு ஒரு குண்டூசி எடுத்து கொள்ளுங்கள். குண்டூசியை கொண்டு கேஸ் பர்னரில் இருக்கும் ஓட்டையில் வைத்து குத்துனீர்கள் என்றால் அதில் ஏதும் அடைப்பு இருந்தால் நீங்கி விடும். பின் நன்றாக ஈரம் இல்லாமல் வெயிலில் காய வைத்து விடுங்கள். 

இது போல் வாரத்தில் ஒரு நாள் அல்லது கருப்பு கறை அதிகமாக இருக்குபோதெல்லாம் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பு போல் செய்து விடுங்கள். கேஸ் பர்னரில் கருப்பு கறை அதிகமாக இருந்தால் நீங்கள் சமைக்கும் பாத்திரங்களிலும் இந்த கருப்பு கறை படிந்து விடும். அதனால் இந்த குறிப்பை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் இந்த பதிவை சேர் செய்யுங்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பழைய கேஸ் அடுப்பை புதியது போல் மாற்றுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement