Gas Maintenance Tips
பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர். கேஸ் அடுப்பு வாங்கிய புதிதில் நல்லா இருக்கும். நாளடைவில் கேஸ் அடுப்பு துருப்பிடித்து விடும், கேஸ் பர்னர் மாற்றுகிற மாதிரி இருக்கும். இல்லையென்றால் அடிக்கடி ரிப்பேர் ஆகி கொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் கேஸை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான். கேஸை சரியாக பராமரித்தாலே ரிப்பேர் ஆகாமலும், புதிதாகவும் வைத்து கொள்ளலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கேஸை துடைக்க வேண்டும்:
தினமும் கேஸை துடைக்க வேண்டும். நீங்கள் அடுப்பை பயன்டுத்திய பிறகு அடுப்பின் சூடு ஆறியதும் காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொண்டு துடைக்கவும்.
வாரத்தில் ஒரு நாள் பாத்திரம் விளக்கும் சோப்பை பயன்படுத்தி ஸ்க்ரப் வைத்து தேய்க்கவும். கேஸின் மேல் பகுதி, கேஸின் கீழ் பகுதி போன்றவற்றை துடைக்க வேண்டும்.
சூடான நீரில் சிறிதளவு வினிகர், பாத்திரம் விளக்கும் சோப் மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை லீகுய்ட் பயன்படுத்தி கேஸை துடைக்கவும். இந்த முறையை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி கிளீன் செய்யவும்.
கேஸ் பர்னர் கருத்து போயிருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
கேஸ் பர்னர், கேஸ் Stand:
வாரத்தில் ஒரு நாள் கேஸ் STAND-யை பாத்திரம் துலக்கும் சோப்பை பயன்படுத்தி தேய்த்து கழுவினால் போதுமானது.
கேஸ் பர்னரை மாதத்திற்கு ஒரு முறை வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி தேய்க்க கழுவ வேண்டும். கழுவிய வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். பின்பு கேஸ் பர்னரில் இருக்கும் ஓட்டையில் ஊசியை பயன்படுத்தி குத்த வேண்டும். இப்படி குத்துவதினால் அதில் ஏதும் அடைப்பு இருந்தால் நீங்கிவிடும்.
பரிசோதனை:
வருடத்திற்கு ஒரு முறை கேஸ் நிபுணரை அழைத்து பரிசோதிக்க வேண்டும். இது போல் பரிசோதிப்பதால் சின்ன பிரச்சனையாக இருக்கும் போது கண்டறிந்து சரி செய்து விடலாம்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் கேஸ் பர்னரை பராமரித்தால் கேஸ் அடிக்கடி ரிப்பேர் ஆகாமலும், புதிதாகவும் வைத்து கொள்ளலாம்.
கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க இத பண்ணாலே போதும்!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |