Gas Stove Burner Cleaning Tips
வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் பெண்கள் இல்லாத இடங்களே இருக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் வேலை அதிகமாகும் இருக்கும். இது நம் அனைவருக்குமே தெரியும். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு முழுவதும் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற வீட்டில் இருக்கும் வேலைகளை செய்கிறார்கள். அப்படி அவர்கள் செய்யும் வேலைகளில் இதுவும் ஒன்று. என்ன என்று கேட்பீர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுதாக படியுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Gas Stove Burner Cleaning Tips in Tamil:
இன்றைய நிலையில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருமே கேஸ் அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பயன்படுத்தும் போது அதில் பால், சாதம் போன்று ஏதாவது பொங்கி ஊற்றி விட்டால் அதை சுத்தம் செய்வதே பெரிய வேலையாக இருக்கும்.
அதுவே கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னர் கருத்து போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். கேஸ் அடுப்பு பர்னரை சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பேக்கிங் சோடா மட்டும் போதும் உங்கள் வெள்ளி நகைகளை 5 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்..! |
ஸ்டேப் -1
முதலில் ஒரு பாக்கெட் ENO பவுடர் வாங்கி கொள்ள வேண்டும். ENO பவுடர் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும். அஜீரணம், வாய்வு மற்றும் குமட்டல் ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஸ்டேப் -2
அடுத்து ஒரு பாத்திரத்தில் இந்த ENO பவுடரை போட வேண்டும். பின் அதில் வினிகர் 1/2 கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டில் ஆங்காங்கே படிந்திருக்கும் கறைகளை போக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க..! அப்புறம் உங்க வீடு பளபளன்னு மாறிடும்..! |
ஸ்டேப் -3
பின் அதில் கேஸ் அடுப்பு பர்னரை வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊற்ற வேண்டும்.
ஸ்டேப் -4
சூடான தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும். பின் அதை எடுத்து பார்த்தால் அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். நீங்களும் இதுபோல ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் உங்களுக்கு தெரியும்.
பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? |
உங்கள் வீடு எப்பொழுதும் வாசனையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..! |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |