கேஸ் புதிதாகவே இருக்க
நம் முன்னோர்களின் காலத்தில் அடுப்பை தான் பயன்படுத்தினார்கள். அதவது ஊருக்கு ஒரு வீட்டில் தான் கேஸ் அடுப்பை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலத்தில் கேஸ் இல்லாத வீடுகளே இல்லை. பொதுவாக வீட்டில் கிட்சனை பார்த்தாலே அவர்கள் வீட்டை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் வீட்டை அவர்களால் கவனிக்க முடிவதில்லை. வீட்டில் வாரத்தில் ஒரு லீவு கிடைக்கும் போது தான் வீட்டை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது எளிமையான முறையில் வீட்டை சுத்தம் எப்படி என்று தேடுவீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதவில் வீட்டு வேலைகளை ஈசியாக முடிப்பதற்கான வழிகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கேஸ் புதிதாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேஸை புதிதாக மாற்ற:
நீங்கள் வாரத்தில் ஒரு நாள் கேஸை செய்பவராக இருந்தால் பதிவில் கூறியுள்ளது போல் செய்ய வேண்டும்.
முதலில் கேஸ் மேல் பகுதியில் இருக்கும் ஸ்டாண்ட் வளையம், கேஸ் பர்னர் இரண்டையும் எடுத்து விட வேண்டும்.
அதன் பிறகு ஒரு கப் எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
பின் அதில் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கேஸ் முழுவதும் ஊற்றி 10 நிமிடத்திற்கு ஊற விடவும்.
10 நிமிடம் கழித்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்பான்ச் எடுத்து நன்றாக தேய்த்து விடவும். பின் தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்.
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க..!
கேஸ் பர்னர் சுத்தம் செய்வது:
கேஸ் பர்னரை சுத்தம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் பர்னர் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொள்ளவும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் இதில் கேஸ் பர்னரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அனைத்து அதிலேயே 1/2 மணி நேரத்திற்கு இருக்கட்டும். சூடு ஆறிய பிறகு கேஸ் பர்னரை வெளியில் எடுத்து லேசாக தேய்த்தாலே போதும் கேஸ் பர்னர் புதிதாக மாறிவிடும்.
கேஸ் ஸ்டாண்ட்:
கேஸ் ஸ்டாண்ட் மற்றும் மற்றும் கேஸ் வளையம் இரண்டையும் எடுத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்பான்ச் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
மேல் கூறியுள்ளது போல வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தாலே கேஸ் அடுப்பு துரு பிடிக்காமல் புதிதாக இருக்கும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |