Gas Stove Cleaning Tips in Tamil
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கின்றார்கள். அதிலும் ஒரு சிலர் தங்களது துறையில் பல வகையான சாதனைகளையும் படைத்து வருகின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்களுக்கும் வீடு வேலை செய்வது என்பது மிக மிக கஷ்டமாக உணர்வார்கள். ஏனென்றால் பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை பார்த்தால் அவர்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன்பு வரை நமது வீடுகளில் பல வேலைகளை செய்வார்கள். அதிலும் ஒரு சில வீட்டு வேலைகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது வீட்டினை சுத்தம் செய்வது சமையல் அறையினை சுத்தம் செய்வது போன்றவை மிக மிக கடினமான வேலை ஆகும். அதிலும் சமையல் அறையில் உள்ள கேஸ் ஸ்டாவை சுத்தம் செய்வதற்குள் நமது பாடு பெரும்பாடாக போய்விடும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள கேஸ் ஸ்டாவின் பர்னரை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேஸ் பர்னரை புத்தம் புதுசாக மற்ற டிப்ஸ்:
நமது சமையல் அறையின் மிகவும் முக்கியமான பொருள் என்றால் அது கேஸ் ஸ்டவ் தான். இப்படிப்பட்ட கேஸ் அடுப்பில் மிகவும் முக்கியமான ஒரு பாகம் என்றால் அது கேஸ் பர்னர் தான்.
இதனை நாம் என்னதான் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என சுத்தம் செய்தாலும் அது திரும்ப திரும்ப கருப்பு நிற கரையால் நிரப்பப்பட்டுவிடும். பின்னர் அதனை மிகவும் கடினபட்டு தேய்த்து போக்க வேண்டும்.
ஆனால் இனிமேல் அப்படி தேய்க்காமல் மிகவும் எளிமையான முறையில் நமது கேஸ் பர்னரை சுத்தம் செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
குறிப்பிற்கு தேவையான பொருள்:
- புளி – 1 எலுமிச்சை பழ அளவு
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழ அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை நன்கு கரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதில் நமது கேஸ் பர்னரை அதில் 20 முதல் 30 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள். பின்னர் லேசாக தேய்த்தாலே அதில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மாத கணக்கில் புதினா வாடி போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |